நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தில் திரிஷாவின் கதாபாத்திரம் குறித்து துணை இயக்குனர் ரத்தின குமார் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், திரிஷாவின் கதாபாத்திரம் முதலில் யோசிக்கப்பட்டு பின்னர் கதையோடு உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார். மேலும் கில்லி படத்தில் விஜய், திரிஷா ஜோடியையும் அவர் நினைவு கூர்ந்தார்.
மேலும் கதைப்படி சில ரொமான்ஸ் காட்சிகளும், பாடல்களும் படத்தில் உள்ளன என லியோபடத்தின் துணை இயக்குனர் ரத்தின குமார் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/qSwXDUo58JCNGwD8GTjG.jpg)
மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கில்லி படத்தில் இருந்து சில குறிப்புகளை எடுத்துக்கொண்டார் எனவும் ரத்தின குமார் கூறினார்.
கில்லி படத்தில் விஜய், திரிஷா ஜோடி பெரிதும் பேசப்பட்டது. இருவரும் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. அந்தப் படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களும் கொண்டாடப்பட்டன. குறிப்பாக அப்படி போடு பாடலுக்கு திரிஷா, விஜய் நடனம் பெரிதும் பேசப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/qDwbtzLpHzcC2z9fR1Ob.jpg)
லியோ படத்தில் விஜய் திரிஷா தவிர முன்னணி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மற்றும் மாத்தீவ் தாமஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அஜித், விஜய் படங்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“