புயலுக்கு முந்தைய அமைதி தனுஷ் சார் - இளம் நடிகை புகழாரம்

Aishwarya Lekshmi lauds Dhanush : புயலுக்கு முந்தைய அமைதி தனுஷ் சார் என்று மலையாள இளம் நடிகை ஐஸ்வர்ய லெட்சுமி டுவிட்டரில் தனுஷூக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Aishwarya Lekshmi lauds Dhanush : புயலுக்கு முந்தைய அமைதி தனுஷ் சார் என்று மலையாள இளம் நடிகை ஐஸ்வர்ய லெட்சுமி டுவிட்டரில் தனுஷூக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dhanush,asuran,Aishwarya Lekshmi, Manju warrier, Vetri Maaran,Karthik Subbaraj, twitter

Dhanush,asuran,Aishwarya Lekshmi, Manju warrier, Vetri Maaran,Karthik Subbaraj, twitter, தனுஷ், அசுரன், வெற்றிமாறன், ஐஸ்வர்ய லெட்சுமி, மஞ்சு வாரியர், வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ், டுவிட்டர்

புயலுக்கு முந்தைய அமைதி தனுஷ் சார் என்று மலையாள இளம் நடிகை ஐஸ்வர்ய லெட்சுமி டுவிட்டரில் தனுஷூக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisment

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அசுரன். இந்த படம், அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் பாராட்டுகளை தொடர்ந்து குவித்து வருகிறது. படம் பார்த்த அனைவரும் படம் குறித்து நல்லவிதமாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ், தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்திலான D40 என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் மலையாள இளம் நடிகை ஐஸ்வர்ய லெட்சுமி, கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

D40 படக்குழுவினருக்கு, அசுரன் படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. பின் தனுஷ் உடன் இருக்கும் படத்தை நடிகை ஐஸ்வர்ய லெட்சுமி டுவிட்டரில் பதிவிட்டு பின்வருமாரு எழுதியுள்ளார்.

Advertisment
Advertisements

இப்போதுதான் அவருடைய ஒரு முக்கிய தீவிரமான நடிப்பை பார்த்து அவரது சிரிப்பையும் பார்த்தேன். சமத்துப்பையன் சிரிக்கிறார். புயலுக்கு முந்தைய அமைதி. தனுஷ் சார். உடன் நடிக்கும் நடிகரின் பெருமை, எங்கள் மொத்த குழுவும் அவருடைய நடிப்பை பார்த்து பிரமித்துப்போய் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மஞ்சு வாரியரின் நடிப்பு குறித்து குறிப்பிட்டுள்ளதாவது, பச்சையம்மா...உண்மையிலேயே பிரமாதமான நடிப்பு என்று தெரிவித்துள்ளார்.

அசுரன் படத்தின் மூலம், மலையாள திரையுலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியார், தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Twitter Dhanush

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: