Asuran In Tamilrockers: முதல் நாளே அசுரனை ‘லீக்’ செய்த தமிழ் ராக்கர்ஸ்
Tamilrockers Leaked Asuran Tamil Movie: இன்று படம் ரிலீஸாகி சில மணி நேரங்களில் முழுப் படத்தையும் ஆன் லைனில் திருட்டுத்தனமாக வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.
Tamilrockers Leaked Asuran Tamil Movie: இன்று படம் ரிலீஸாகி சில மணி நேரங்களில் முழுப் படத்தையும் ஆன் லைனில் திருட்டுத்தனமாக வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.
asuran full movie download tamilrockers, asuran tamilrockers, asuran movie tamilrockers, asuran tamil movie tamilrockers, அசுரன் ஃபுல் மூவி, தமிழ்ராக்கர்ஸ்
Asuran Full Movie Leaked To Free Download In Tamilrockers: தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படத்தை ரிலீஸ் ஆன முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது. தனுஷ் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் சூழலில், படம் ஆன் லைனில் வெளியானதால் படக் குழு ஷாக் ஆனது.
Advertisment
தனுஷ்- இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் 4-வது படம், அசுரன். கலைப்புலி தாணு தயாரிப்பில் இன்று (அக்டோபர் 4) வெளியான இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் இன்று ரிலீஸானது முதல் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
படத்தில் தனுஷின் நடிப்பு, வெற்றிமாறனின் இயக்கம், ஜி.வி.பிரகாஷின் இசை ஆகியன வெகுவாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. எனவே கலெக்ஷனில் இந்தப் படம் பெரிய வெற்றியை பெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
Advertisment
Advertisements
ஆனால் படக்குழு அதிர்ச்சி அடையும் விதமாக இன்று படம் ரிலீஸாகி சில மணி நேரங்களில் முழுப் படத்தையும் ஆன் லைனில் திருட்டுத்தனமாக வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். தொடர்ந்து இதுபோல கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை புதுப்படங்களை வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ் குடைச்சல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் ராக்கர்ஸுக்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகளை சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் எடுத்தாலும்கூட, அவ்வப்போது தனது இணையதள முகவரிகளை மாற்றிக்கொண்டு தமிழ் ராக்கர்ஸ் இந்த அட்டூழியத்தை தொடர்கிறது.
இன்று ரிலீஸான மற்றொரு படமான 100 பர்சண்ட் காதல் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது. சில தினங்களுக்கு முன்பு வெளியான காப்பான், நம்ம வீட்டுப் பிள்ளை படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் ஆன் லைனில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.