/tamil-ie/media/media_files/uploads/2020/12/vettrimaran-dhanush.jpg)
asuran movie dhanush asuran
asuran movie dhanush asuran : தேசிய விருதுக்கு இணையாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். தனுஷ் ரசிகர்கள் இந்த சந்தோஷ தருணத்தை கொண்டாடி வருகின்றனர்.
தென்னிந்திய திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் 2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர்கள் அஜித்குமார், தனுஷ்,மோகன்லால், நாகார்ஜூனா, நடிகை ஜோதிகா உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.
2019ல் வெளியான திரைப்படங்களுக்கு 2020ல் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கரோனா நெருக்கடி காரணமாக அனைத்துப் பொது நிகழ்ச்சிகளும் ரத்தானதால் இந்த விருது வழங்கும் விழாவும் ரத்தானது. தற்போது பிப்ரவரி மாதம் தாதா சாஹேப் பால்கே விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 2020-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு அசுரன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலை படமாக்கத் தேர்ந்தெடுத்த முதல் அடியிலிருந்து வன்மத்தைத் தூண்டாத தீர்வை பாடமாகச் சொன்ன க்ளைமாக்ஸ் வரை கொண்டாடப்பட்ட படைப்பு அசுரன். வர்க்கம், சாதி இரண்டின் அடிப்படையிலான ஏற்ற தாழ்வு, நில அரசியல், பஞ்சமி நிலங்கள் அபகரிக்கப்பட்ட சூழல் என மிக தீவிரமான ஒரு பிரச்சனையை தீவிரம் குறையாத சுவாரசியமான ரிவென்ஜ் கதையில் சினிமாவாக்கி வெற்றி பெற்றார்கள். இப்போது அதற்கான அங்கீகாரம் சர்வதேச அளவில் கிடைத்துக் கொண்டிருக்கிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us