scorecardresearch

தனுஷின் ‘அசுரன்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ஃபோக் சாங்!

Asuran Movie: தந்தை இரண்டு மகன்கள் என மொத்தம் 3 கதாபாத்திரங்களில் தனுஷ் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

asuran box office collection
asuran box office collection

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘அசுரன்’.

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை மையமாகவும், மதுரையை கதைகளமாகவும் வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் தந்தை இரண்டு மகன்கள் என மொத்தம் 3 கதாபாத்திரங்களில் தனுஷ் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

’அசுரன்’ படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் ஜி.வி பிரகாஷ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தனுஷ் – வெற்றி மாறன் கூட்டணியில் கடைசியாக வெளியான ’வட சென்னை’ படத்திற்கு இசையமைக்க, ஜி.வி-யை நாடியபோது, நடிப்பு – இசை என ஏற்கனவே தான் கொடுத்திருந்த கமிட்மெண்டால் அவரால் வேலை செய்ய முடியாமல் போனது. இதைத் தொடர்ந்து மீண்டும் இவர்கள் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் அசுரன் படத்தின் பாடல் பதிவு நடைபெற இருப்பதாகவும், பாடலை கவிஞர் ஏகாதசி எழுதியிருப்பதாகவும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், ஃபோக் பாடலான அதன் பாடகரை ஒரு வாரத்தில் அறிவிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Asuran movie songs dhanush gv prakash vetrimaran