scorecardresearch

25 வருஷமா திருமாவை ஃபாலோ பண்றேன்; ஆனா பேசியது இல்லை: அசுரன் பட வில்லன்

விசிக தலைவர் திருமாவளவன் ஒரு இன்றியமையாத தனிப்பெரும் சக்தியாக மாற வேண்டும் என்று அசுரன் பட வில்லன் தமிழ் தெரிவித்துள்ளார்.

25 வருஷமா திருமாவை ஃபாலோ பண்றேன்; ஆனா பேசியது இல்லை: அசுரன் பட வில்லன்

விசிக தலைவர் திருமாவளவன் ஒரு இன்றியமையாத தனிப்பெரும் சக்தியாக மாற வேண்டும் என்று அசுரன் பட  வில்லன் தமிழ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  அசுரன் பட வில்லன் தமிழ் பேசியதாவது: ”ஆயிரம் விருது வாங்கினாலும் அண்ணன் கையில் இருந்து வாங்கும் ஒரு விருது போல வராது. ஞானநாதி அண்ணன் சொன்னார்கள், திருமாவளவனை முன்பு நான் பார்த்ததில்லை என்று. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருப்பாளர்கள்  சந்திர சேகர், ராகவன், சசி ஆகியோரால் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இதை திருமா அண்ணாவிடம் சொன்னதில்லை.

எனக்கு அரசியல் தெரிந்த காலத்திலிருந்து, 25 வருடங்களாக அண்ணன் திருமாவளவனை தெரியும். திருமாவளனின் எல்லா பேரணிகளிலும் கலந்துகொள்வேன். 2009ம் ஆண்டு திருமா அண்ணன் நடத்திய உண்ணாவரதத்தில் 2 நாட்கள் அவருடன் இருந்தேன்.  அவர் சோர்வாக, சோர்வாக வடமாவட்டங்கள் பத்தி எரிந்தது. ஆனால் அவரை நெருங்கிச் சென்று நான் பேசியதில்லை. இன்று அவரை நெருங்கிச் சென்றேன். அவர் கையால் விருது பெற்றிருக்கிறேன். அவருடமிருந்து விருது கிடைப்பதில் மகிழ்ச்சி. இந்த 30 ஆண்டுகளில் திருமாவளவனை தவிர்த்து இங்கே அரசியல் பேசிட முடியாது. எங்களை போல தம்பிகளுக்கு ஒரு ஆசை இருக்கிறது. தனிபெரும் சக்தியாக அவர் மாற வேண்டும். அதற்கான யூகங்களை அண்ணன் உருவாக்க  வேண்டும்”  என்று அவர் கூறினார்

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Asuran movie villan speech about thirumavalavan

Best of Express