Dhaush Starrer Asuran Movie Audience Review: நடிகர் தனுஷ் – இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் 4-வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அசுரன்’. இதில் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.
எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை மையமாக வைத்து அசுரன் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது அசுரன் படத்தின் மீதும், தனுஷின் கதாபாத்திரத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. மலையாளத்தில் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற மஞ்சு, அசுரன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். கொடி படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் தனுஷ்.
அசுரன் படத்தின் ட்ரைலர் அதிக பாராட்டுகளைப் பெற்று, ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது. தனுஷ்- வெற்றி மாறன் காம்போ ஒருபோதும் தங்கள் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்கள். கடந்த வருடம் இவர்கள் கூட்டணியில் வெளியான வடசென்னை ரசிகர்களிடம் அதிக பாராட்டுக்களைப் பெற்றது. வெகுநாட்கள் கழித்து தனுஷின் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது, பாராட்டுகளையும் படம் குறித்த கருத்துகளையும் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்
Live Blog
Asuran Movie Review and Ratings in Tamil
தனுஷ் நடித்திருக்கும் அசுரன் படத்தின் லைவ் விமர்சனத்தை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.
Web Title: Asuran review rating dhanush vetrimaran manju warrier
Highlights
இடைவேளை சண்டைக் காட்சி அதகளத்தின் உச்சம்.
மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று
வட சென்னை படத்தை விட 50 மடங்கு சிறந்த படம் என்பது ரசிகர்களின் பரவலான ட்வீட்டாக உள்ளது.
அசுரன் படம் திரையிடப்படும் தியேட்டர்களில், விஜய்யின் பிகில் படத்திற்கான புரமோஷன் செய்யப்படுகிறது.
நடிகர் கிருஷ்ணா தனது ட்விட்டரில்,
ரசிகர் ஒருவர் படம் பார்த்துவிட்டு, “எங்க ஜனம் பார்த்த வலிய, ஹீரோயிசத்துடன் வெற்றிமாறன் சொல்லி இருக்கார்’ என்று பதிவிட்டுள்ளார்.
அசுரன் படத்தில் தனுஷின் மிரட்டலான நடிப்பிற்கு அதிர்வை ஏற்படுத்துவது ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை தான். வா அசுரா வா.. என்று பிஜிஎம் ஒலிக்கும் போதெல்லாம், சிலிர்க்க ஆரம்பித்துவிடுகிறது.
பேசாமே, ஜி.வி. பிரகாஷ் நடிப்பதை நிறுத்திட்டு மீண்டும் மியூசிக் பண்ண ஆரம்பிச்சுடலாம்.
அந்தக் கடைசி காட்சியில் தனுஷின் சிரிப்புக்கு விசில் சத்தம் தெறிக்குதாமே!!
அசுரன் வரிக்கு கிடைத்த ஒரு வரி விமர்சனம்.
ஆயுத பூஜையை ஒட்டி செவ்வாய் கிழமை வரை விடுமுறை என்பதால், பெரும்பாலான ரசிகர்கள் திரையரங்கிற்கு செல்வார்கள். அப்புறம் என்ன அசுரன் ப்ளாக் பஸ்டர் ஹிட் தான்!
ஒப்பனைகள் இன்றி, யதார்த்தத்தை இயல்பாக பிரதிபலிக்கும் விதத்தில் தென்னிந்திய சினிமாக்கள் என்றுமே பெஸ்ட் தான்.
வயதான தோற்றத்தில் தனுஷ் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்காகவே இன்னொரு தேசிய விருதை வழங்கலாம் என இவர் குறிப்பிட்டுள்ளார்.
கேர்ள் பிரெண்ட் முக்கியமா, படிப்பு முக்கியமான்னு கேட்டா, நா ரெண்டுக்கும் சாரி சொல்லிட்டு, தனுஷோட அசுரன் படத்துக்கு தான் போவேன்.
சின்மயி குரலில் இப்படியொரு கிராமத்துப் பாடலா…?
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் அசுரன் படத்தில் இணைந்தனர். பொல்லாதவன், ஆடுகளம் ஆகியப் படங்களில் மாபெரும் வெற்றியைக் கொடுத்த இந்தக் கூட்டணியின் கம்பேக் பெரிதும் கொண்டாடப்பட்டது.
தனுஷின் அசுரன் படம் மாஸ்டர் பீஸ் மக்கா..
அசுரன் படத்திற்கு தன் வாழ்த்துகளை தெரிவித்திருக்கும் நடிகர் கிருஷ்ணா, நடிகர் பிரசன்னா மற்றும் குடும்பத்தினருடன் படம் பார்க்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அசுரன் படத்தைக் கொண்டாடும் கர்நாடக தனுஷ் ரசிகர்கள்…
சில வாரங்களுக்கு முன்னர் வெளியான அசுரன் படத்தின் ட்ரைலர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது