Asuran Song: அசுரத்தனமான வேடத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் ‘பிளட் பாத்’ லைரிக் வீடியோவை ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்து வருகிறார்கள்.
Asuran Song: அசுரத்தனமான வேடத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் ‘பிளட் பாத்’ லைரிக் வீடியோவை ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்து வருகிறார்கள்.
asuran songs download, asuran song download, asuran full movie download, அசுரன், அசுரன் விமர்சனம்
Asuran Tamil Movie: அசுரன் படம் திரைக்கு வரும் முன்பே, புதன் கிழமை வெளியான ‘பிளட் பாத்’ லைரிக் வீடியோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
Advertisment
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில், அசுரன் திரைப்படம் அக்டோபர் 4-ம் தேதி (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் மூலமாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார். அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.
புதன்கிழமை இந்தப் படத்தின் ‘ஸ்னீக் பீக்’கான ‘பிளட் பாத்’ லைரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்தப் படத்தில் இளைஞர், நடுத்தர வயதுக் காரர், முதியவர் என 3 வேடங்களில் தனுஷ் மிரட்டுகிறார். அவரது அசுரத்தனமான வேடத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் ‘பிளட் பாத்’ லைரிக் வீடியோவை ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்து வருகிறார்கள்.
Advertisment
Advertisements
சூர்யாவின் காப்பான், சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய படங்களுக்கு தனுஷின் அசுரன் டஃப் பைட் கொடுக்கும் என தெரிகிறது.