scorecardresearch

சசிகுமாரின் ‘அசுரவதம்’ : முதல் நாளில் மாஸ் ரெஸ்பான்ஸ் தரும் ரசிகர்கள்!

அசுரவதம் படத்தின் முதல் நாள் ரெஸ்பான்ஸ்

சசிகுமாரின் ‘அசுரவதம்’ : முதல் நாளில் மாஸ் ரெஸ்பான்ஸ் தரும் ரசிகர்கள்!
Asuravadham movie response

மருது பாண்டியன் இயக்கத்தில் சசிகுமார், நந்திதா நடித்திருக்கும் திரைப்படம் அசுரவதம். 7 க்ரின் ஸ்டுடியோ என்ற புதிய நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று ரிலீசானது. ஆக்‌ஷன் திரில்லரான இந்த படத்தை எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார். தொடர் தோல்வி படங்களால் துவண்டிருக்கும் சசிகுமாரின் மார்கெட்டை இந்தப் படம் தூக்கி நிறுத்துமா? வெற்றிப் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள சசிகுமாரின் கனவு பலிக்குமா?

அசுரவதம் படத்தின் முதல் நாள் ரெஸ்பான்ஸ் மற்றும் ரியாக்ஷன்ஸ் குறித்த பார்வை இங்கே,

சித்து – தமிழ் சினிமாவில் சிறந்த ரிவென்ஜ் திரைப்படம் இது. வித்தியாசமாகவும், சமூக கருத்துடனும் மிகச்சரியான விதத்தில் படம் எடுக்கப்பட்டுள்ளது. நிறைய வன்முறை காட்சிகள் இருந்தாலும், அதற்கான நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது.

ராஜசேகர் – அபாரமான முதல் பாதி. குறைவான வசங்களுடனும் வித்தியாசமான நடிப்பை வழங்கியுள்ளார் சசிகுமார். கோவிந்த் வசந்தின் பின்னணி இசை, நாடி நரம்பை அதிர வைக்கிறது. தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறோம்.

வைபர் – அருமையான த்ரில்லர் திரைப்படம். வழக்கமான பழிவாங்குதல் கதை கிடையாது. சசிகுமார், நந்திதா, படத்தின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பிளஸ். நிச்சயம் படத்தை ரசிக்கலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Asuravadham first day fans reaction and response

Best of Express