Advertisment

பிகில் படத்தில் வேலை செய்த 400 பேருக்கு மோதிரம் பரிசளித்த விஜய்

பிகில் படத்தில் விஜய் தனது கடைசிநாள் படப்பிடிப்பின்போது, படத்தில் வேலை செய்த குழுவினர் 400 பேருக்கு தங்க மோதிரம் பரிசளித்து பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay, Bigil, Atlee, Nayanthara, Bigil football, Tamil, பிகில், விஜய் நடிக்கும் பிகில், படக்குழுவினருக்கு விஜய் மோதிரம் பரிசு, singa penne, ar rahman, gold rings to 400 members, vijay double action,

Vijay, Bigil, Atlee, Nayanthara, Bigil football, Tamil, பிகில், விஜய் நடிக்கும் பிகில், படக்குழுவினருக்கு விஜய் மோதிரம் பரிசு, singa penne, ar rahman, gold rings to 400 members, vijay double action,

Vijay gifted Gold Rings to 400 crew Members: பிகில் படத்தில் விஜய் தனது கடைசிநாள் படப்பிடிப்பின்போது, படத்தில் வேலை செய்த குழுவினர் 400 பேருக்கு தங்க மோதிரம் பரிசளித்து பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Advertisment

இயக்குனர் அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும், இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பிகில் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கப் பெண்ணே பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில், கடந்த சில மாதங்களாக பிகில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விருவிருப்பாக நடைபெற்று வந்தது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், பிகில் படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. விஜய் சம்பந்தப்பட்ட இறுதிக் காட்சிகள் முடிவடைந்ததால், விஜய் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக, பிகில் படத்தில் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட 400 பேருக்கு பிகில் என்று பெயர் பொறிக்கப்பட்ட தங்க மோதிரத்தை விஜய் பரிசாக அளித்தார். அதே போல, இந்த படத்தில் கால்பந்து வீராங்கனைகளாக நடித்தவர்களுக்கு விஜய் தனது கையெழுத்திட்ட கால்பந்தை பரிசாக வழங்கியுள்ளார். நேற்று விஜய் வழங்கிய மோதிரம் மற்றும் கால்பந்தை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். விஜயின் இந்த எதிர்பாராத பரிசால் பிகில் படக்குழுவினர் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

Actor Vijay Nayanthara Atlee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment