வெற்றிக்கு தயாரான ராணி; அட்லி - அல்லு அர்ஜூன் கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்!

'ஜவான்' திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் தோன்றிய தீபிகா படுகோன், அட்லி இயக்கும் இந்த படத்தில் ஒரு வலுவான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

'ஜவான்' திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் தோன்றிய தீபிகா படுகோன், அட்லி இயக்கும் இந்த படத்தில் ஒரு வலுவான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

author-image
WebDesk
New Update
AA22A6 Deepika

சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த அல்லு அர்ஜூன் அட்லி இணையும் திரைப்படத்தில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் தீபிகா படுகோன் இணைந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், "ராணி வெற்றி பெற புறப்படுகிறார்!" (The Queen marches to conquer!) என்ற தலைப்புடன் வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இந்த படத்தின் மூலம், புஷ்பா ஸ்டார் அல்லு அர்ஜுனுடன் தீபிகா படுகோன் முதன்முறையாக இணைகிறார். 'ஜவான்' திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் தோன்றிய தீபிகா படுகோன், அட்லி இயக்கும் இந்த படத்தில் ஒரு வலுவான கேரக்டரில் நடிக்கவுள்ளார். தீபிகா படுகோனின் இணைப்பு உறுதி செய்யப்பட்டாலும், இந்த படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முன்னணி நடிகைகள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், மற்றும் பாக்கியஸ்ரீ போர்ஸ் போன்ற நடிகைகள் இந்த பெரிய திட்டத்தில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. இந்த கூடுதல் நடிகர்கள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், பல கதாநாயகிகள் இணையும் வாய்ப்பு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

அட்லீ இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு,  ஜூன் 2025-ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் "இணையான பிரபஞ்சம்" (parallel universe) என்ற கருத்தை ஆராயும் என்றும், அல்லு அர்ஜுன் மூன்று தனித்துவமான கேரக்டர்களில் நடிக்க உள்ளதாகவும் அதில், ஒரு அனிமேஷன் கதாபாத்திரமும் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான படம் காட்சி எல்லைகளைத் தாண்டி, சர்வதேச ஸ்டுடியோக்களில் இருந்து உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளது. இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கவுள்ள இந்த சினிமா பிரமாண்டம், மேலும் பல எதிர்பார்ப்புகளை தூண்டுகிறது.

'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் உச்சத்தில் இருக்கிறார். 'புஷ்பா 3' தயாராகிக் கொண்டிருக்க, மேலும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் உடன் ஒரு புராண படமும் தயாராகி வருவதால், அல்லு அர்ஜூன் தனது சினிமா பயணத்தில் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக் கொள்கிறார். இப்போது, தீபிகா படுகோன் படத்தில் அவருடன் இணைந்திருப்பதால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Deepika Padukone

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: