/tamil-ie/media/media_files/uploads/2018/11/d684.jpg)
'விஜய் 63' படத்தை இயக்கும் அட்லீ! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சர்கார் படத்தைத் தொடர்ந்து, விஜய் நடிக்கவுள்ள அடுத்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 'மெர்சல்' படத்தின் அதே கூட்டணி இதில் மீண்டும் இணைந்துள்ளது.
சர்கார் புயல் ஓய்ந்துள்ள நிலையில், விஜய்யின் 63வது படத்தை அட்லீ இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களை விஜய்யை வைத்து இயக்கிய அட்லீக்கு தற்போது மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மெர்சல் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனமே, இப்படத்தையும் தயாரிக்கிறது. அதேபோல், மெர்சல், சர்கார் படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
The wait is over ???????????? ????????????????AGS -Thalapathy Vijay- Atlee -AR Rahaman #THALAPATHY63 ❤❤❤ pic.twitter.com/q8fpQ6qXGc
— Archana Kalpathi (@archanakalpathi) 14 November 2018
ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, இன்று இரவு 7 மணிக்கு மற்றுமொரு சர்பிரைஸ் காத்திருப்பதாக அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டரில் பதிவிட்டிருப்பது மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
We have a surprise for you at 7:00 pm Start waiting ???????? #Thalapathy63
— Archana Kalpathi (@archanakalpathi) 14 November 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.