இயக்குனர் அட்லீ பழைய படங்களில் இருந்து காப்பி அடிப்பதாக நீண்ட நாட்களாக எழுந்து வரும் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார். அவரை வீழ்த்துவதற்கு ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது என்று இயக்குனர் அட்லீ கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Atlee on battling plagiarism accusations: ‘A huge set of people want to bring me down’
அட்லீ படம் வெளிவரும் போதெல்லாம், தவிர்க்க முடியாமல் அவருடைய படம் ஒரிஜினல் இல்லை என்று கூறப்படுகிறது. இயக்குனர் மணிரத்னத்தின் கிளாசிக் படமான மௌன ராகத்தின் (1986) மாடர்ன் வெர்ஷன் என்று அவரது முதல் படமான ராஜா ராணியில் இருந்தே விமர்சனங்கள் அவருக்கு எதிராக முன்வைக்கப்படுகிறது. அவரது இரண்டாவது படமான தெறி, பாட்ஷா உள்ளிட்ட பல படங்களின் கலவையைப் போல இருந்ததாக கூறப்பட்டது. மெர்சல் மற்றும் பிகில் படமும் இதே போன்ற புகார்களை எதிர்கொண்டது. சமீபத்தில், வெளியான ஜவான் திரைப்படம், தாய் நாடு, அந்நியன், கைதியின் டைரி, மாஸ்டர், ரமணா போன்ற பல தமிழ் படங்களின் கலவை என்று விமர்சனம் செய்யப்பட்டது. சமீபத்திய பேட்டியில், அட்லீ இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துப் பேசியுள்ளார்.
இது குறித்து அட்லீ கூறுகையில், “ராஜா ராணி படத்தை இயக்கியபோது, குடும்பங்கள் சிதைந்து வருவதைப் பற்றி ஏதாவது செய்ய விரும்பினேன். ஆனால், ஏற்கனவே ஒரு மைல்கல் படமாக (மௌன ராகம்) இருந்தது… எனவே, ஒரு கட்டத்தில், மற்றவர்களைப் போலவே ஒரு படத்தையும் செய்யக்கூடாது என்று நினைத்தேன். இருப்பினும், இதுவரை செய்யாத ஒரு கதையும் இல்லை. நான் உட்கார்ந்து என் ஸ்கிரிப்ட்களில் உண்மையாக வேலை செய்கிறேன். என்னுடைய படத்தை மற்ற படங்களுடன் ஒப்பிட்டு ஒருவர் இரண்டு வினாடிகளில் ஒரு கருத்தை அனுப்பினால், எனது முயற்சி, நேர்மை மற்றும் உழைப்பு அனைத்தையும் காப்பி என்று நான் நினைக்க மாட்டேன். அது அவர்களின் எண்ணம், நிச்சயமாக, மற்ற படங்களுடன் கதைக்களத்தைப் பகிர்ந்து கொண்ட படங்களை நான் இயக்கியுள்ளேன். எடுத்துக்காட்டாக, ‘தெறி’ ரிலீஸுக்கு முன்னும் பின்னும் வெவ்வேறு வெர்ஷன்கள் உள்ளது. ஆனால், நான் அதைச் செய்யும்போது, அது காப்பி அடிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். காப்பி அடிப்பது எளிதானது என்றால் எல்லோருமே அதைச் செய்யலாமே” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய இயக்குனர் அட்லீ, “படைப்புத் துறையில், நீங்கள் இதே போன்ற கதைகளை உருவாக்குகிறீர்கள். நான் அதை காப்பி அடிக்கிறேன் என்று அர்த்தமல்ல. அது தாக்கத்தை ஏற்படுத்தலாம். எம்.ஜி.ஆர் (ராமச்சந்திரன்) பாடல்களால் ஈர்க்கப்பட்டுதான் நான் அறிமுகப் பாடல்களை உருவாக்குகிறேன். நான் ரிஸ்க் எடுக்கிறேன்... கடந்த 3 வருடங்களில், ஷாருக்கான் சாரிடம் நான் சொன்ன மாதிரியான கதையை யாரும் சொல்லவில்லை. சினிமா உலகில் இப்படிப்பட்ட விமர்சனங்களை நான் மட்டும் எதிர்கொள்கிறேன் என்று நினைக்கிறீர்களா? பல சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாற்றல் உள்ளவர்களும் இதை எதிர்கொண்டுள்ளனர்.” என்று கூறினார்.
அட்லி மேலும் கூறுகையில், தன்னை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெரிய கூட்டம் இருப்பதே இதுபோன்ற விமர்சனங்களுக்கு காரணம். “ஒரு கூட்டம் ஏதாவது ஒரு ஆயுதத்தால் என்னைத் தாக்க விரும்புகிறார்கள். என்னுடைய படம் ஹிட் ஆனதால், அதைப் பற்றி எதுவும் சொல்ல மட்டார்கள். அதுவும் பணம் வசூல் செய்துவிட்டது... அதனால், அதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது. எனவே, என்னை வீழ்த்த ஒரே வழி என்ன? பெரும்பாலும், இதுபோன்ற விமர்சனங்கள் இந்த நபர்களிடமிருந்து மட்டுமே வருகின்றன. ‘அவன் ஜெயிக்கக் கூடாது’ என்ற எண்ணம்தான் காரணம். ரஜினி சாருக்கோ, விஜய் சாருக்கோ, அஜித் சாருக்கோ இந்தப் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறீர்களா? போராடி முன்னேற வேண்டும். இதெல்லாம் தெரியாமல் ஷாருக் சார் என்னைக் கூப்பிடுவாரா?” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.