scorecardresearch

வணங்கான் பட துணை நடிகை மீது தாக்குதல்.. காவல் நிலையத்தில் புகார்

வணங்கான் படத்தின் நடித்துள்ள துணை நடிகை தாக்கப்பட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

attack on Vanagan co-star in Kanyakumari
வணங்கான் படத்தில் நடித்துள்ள துணை நடிகை லிண்டா காவல் நிலையத்தில் புகார்

திரைப்பட இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது இதில் அருண் விஜய் மற்றும் ரோஷினி ஆகியோர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த துணை நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஜிதின் என்பவர் திரைப்படத்திற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து துணை நடிகர் நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைத்து வருகிறார்.

அதன்படி கேரளாவில் இருந்து லிண்டா உள்ளிட்ட ஒன்பது பேரை அழைத்து வந்து சம்பள அடிப்படையில் நடிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், மூன்று நாள்கள் படபிடிப்பு முடிந்த நிலையில் துணை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு சம்பளமாக 22 ஆயிரத்து 600 ரூபாய் கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த ஜிதின் லிண்டாவை தாக்கியதாக தெரிகிறது இதனால் காயமடைந்த லிண்டா கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.
மேலும் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார் இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

வணங்கான் திரைப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடித்தார். அதன்பின்னர் மனஸ்தாபம் ஏற்பட்டு படத்தில் இருந்து விலகிவிட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

செய்தியாளர் த.இ. தாகூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Attack on vanagan co star in kanyakumari