டிடிவி தினகரனுக்கே எனது ஆதரவு.. அட்டக்கத்தி தினேஷின் அதிரடி முடிவு!

ரஜினிகாந்த் நடித்திருந்த கபாலி திரைப்படத்தில் தினேஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் டிடிவி தினகரனுக்கு தான் என்னுடையை ஆதரவு என்று அட்டக்கத்தி தினேஷ் தெரிவித்துள்ளார்.

அட்டக்கக்த்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரூட்டு தலையாக அறிமுகமானவர் தான் நடிகர் தினேஷ். அட்டக்கத்தியில் அவரின் நடிப்பை கண்டும் பலரும் வெகுவாக பாராட்டினார். நேர்த்தியான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்க கூடியவர் என்று பெயரும் தினேஷூக்கு உண்டு.

அட்டக்கத்தி தினேஷ்:

அவரின் நடிப்பில் வெளியான விசாரணை, குக்கூ போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் தினேஷை தவிர்க்க முடியாத நடிகராக மாற்றியது. தற்போது அவரதுது நடிப்பில் ‘அண்ணனுக்கு ஜே’ படம் ரீலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. இதில் தினேஷ் அரசியல்வாதியாக நடித்துள்ளார்.

சமீபத்தின் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது. இதில் தினேஷ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் தினேஷிடம் அரசியல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அட்டக்கத்தி தினேஷ்

அதற்கு அவர், சற்றும் யோசிக்காமல் அதிரடியான பல கருத்துக்களை கூறியுள்ளார். தினேஷ் அளித்த பதில் “ சிறு வயதில் இருந்தே அரசியல் மீது எனக்கு ஆசை இருக்கிறது. அரசியலில் ஈடுபடும் எண்ணமும் இருக்கிறது. ஆனால், அதற்கு அனுபவம் வேண்டும். நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடினால் துப்பாக்கியால் சுடுகிறார்கள். அந்த ஆதங்கம் தான் அரசியலில் இறங்கக் காரணம். வழிகாட்டுவதற்கு சரியான தலைவர்கள் இங்கு இல்லை. இங்கிருப்பவர்கள் கேள்வி கேட்கக் கூட மறுக்கின்றனர்.

முதலமைச்சராக ஆசைப்படும் ‘அட்டக்கத்தி’ தினேஷ்!

நான் கமல் – ரஜினியை ஆதரிக்க மாட்டேன். ஆனால், டிடிவி தினகரனை ஆதரிப்பேன். அவர் இப்போது நன்றாகச் செயல்படுகிறார். பொதுமக்களில் ஒருவனாகக் கூறுகிறேன், அவர் பேசுவது எனக்குப் பிடிக்கும். எல்லாவற்றையும் நேர்த்தியாக அவர் அணுகும் முறை  பிடித்திருக்கிறது” என்றார் தினேஷ்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, கமல் இருவரும் அரசியலில் இறங்குவதாக சமீபத்தில் அறிவித்திருந்தனர்.ஆனால் அவர்கள் இருவரையும் ஆதரிக்காமல் டிடிவி தினகரனை ஆதரிப்பதாக தினேஷ் கூறியிருப்பது கோலிவுட்டில் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த கபாலி திரைப்படத்தில் தினேஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close