Advertisment

அட்டக்கத்தி டூ தங்கலான்: பா ரஞ்சித் - ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா வாழ்க்கையில் நடந்தது என்ன?

சினிமாவின் இயக்குனர் தயாரிப்பாளர் இருவருக்கும் இடையே இருக்கும் ஒத்துழைப்பு இரண்டும் ஒரே பக்கத்தில் மட்டும் இல்லாமல், சம அளவில் இருந்தால் மட்டுமே ஒரு தரமான படம் உருவாகும்.

author-image
WebDesk
New Update
Thangalan Attakathi

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ள தங்கலான் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆகஸ்ட் 15-ந் தேதி (நாளை) படம் வெளியாக உள்ளது. இந்த நாளில் பா.ரஞ்சித் தனது முதல் படமான அட்டக்கத்தி முதல் தற்போது தங்கலான் வரை அவரது படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

Read In English: Attakathi to Thangalaan: Life has come full circle for Pa Ranjith and Studio Green’s Gnanavel Raja

தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் ரஞ்சித்,பத்து வருடங்கள் என்பது வாழ்க்கையில் நீண்ட காலம், மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பல உறவுகள் பிணைக்கப்பட்டு உடைக்கப்படும் இன்றைய சினிமாவில் இந்த 10 வருடம் என்பது இன்னும் நீண்டதாக உணர்கிறேன். ஒரு தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையிலான உறவு அப்படிப்பட்ட ஒன்றுதான்.

சினிமாவின் இயக்குனர் தயாரிப்பாளர் இருவருக்கும் இடையே இருக்கும் ஒத்துழைப்பு இரண்டும் ஒரே பக்கத்தில் மட்டும் இல்லாமல், சம அளவில் இருந்தால் மட்டுமே ஒரு தரமான படம் உருவாகும். இயக்குனர் தனது திறமையை மீண்டும் மீண்டும் நிரூபித்து, இவரை நம்பி முதலீடு செய்யலாம் என்ற நம்பிக்கை உடைய நபராக மாற வேண்டும். அதேபொல் தயாரிப்பு நிறுவனமும் பெரிய மற்றும் சிறந்த படங்களை தயாரித்து தங்கள் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும்.

அந்த வகையில், ஞானவேல் சார் என்னுடைய பயணத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்திருக்கிறார். எங்கள் பயணத்தை நினைவுபடுத்தும் விதமாக தங்கலான் படத்தை உருவாக்கி இருக்கிறேன் என்று இயக்குனர் பா.ரஞ்சித் உருக்கமாக பேசினார்.

ரஞ்சித்தின் சினிமா பயணமும், ஸ்டுடியோ கிரீன் தயாரித்த முதல் படமான சில்லுனு ஒரு காதல் படம் என இரண்டும் 2006 ஆம் ஆண்டு துவங்கியது. இதில் ஸ்டூடியோ கிரீன் 2007-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் மற்றும் பா.ரஞ்சித்தின் குருநாதர் வெங்கட் பிரபு இயக்கததில் வெளியான முதல் படமாக சென்னை 600028 மூலம் தங்களது முதல் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைக் கண்டனர். அதன்பிறகு ஸ்டூடியோ கிரீன் சிங்கம், நான் மகான் அல்ல, சிறுத்தை போன்ற வணிகரீதியான வெற்றிப்படங்களில் பெரிய நிறுவனமாக வளர்ந்தது.

அதே சமயம், அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜா மற்றும் பிரியாணி ஆகிய தோல்விப்படங்களால் தயாரிப்பாளராக முதல் பெரிய சரிவை எதிர்கொண்டனர். இந்த இடைவெளியில் பா.ரஞ்சித் தனது முதல் படத்தை இயக்கினார். சி.வி.குமார் தயாரித்த பா.ரஞ்சித்தின் முதன் படமாக வெளியான அட்டகத்தி என்று பெயரிடப்பட்ட இந்த திரைப்படம் பெரிய ஹிட்டானது. இந்த படம் தலித் மக்களின் வாழ்வியலை சொல்லும் முக்கிய படமாக பராட்டுக்களை பெற்றிருந்தது.

அட்டக்கத்தி படம் வெளியானது முதல் அதே போன்று தமிழ் சினிமாவில், பலதரப்பட்ட கதைகள் சொல்லப்படுவதற்கு காத்திருக்கின்றன என்பதை உலகிற்குக் காட்டியது. சூர்யா மற்றும் கார்த்தியின் படங்களை தயாரித்து வநத ஸ்டுடியோ கிரீன் விநியோகம் செய்த முதல் படம் அட்டக்கத்தி. ரஞ்சித்தின் முதல் படத்தை ஒரு பெரிய அளவில் வெளியிடும் பொறுப்பை ஞானவேல் ஏற்றுக்கொண்டு அதை சிறப்பாகவும் செய்திருந்தார். இதன் மூலம் ரஞ்சித் – ஞானவேல் இடையே அடுத்த படத்திற்காக இணையும் நிலை உருவானது.

தற்காலிகமாக சியான் 61 என்று பெயரிடப்பட்ட படத்தின் முதல் அறிவிப்பு மற்றும் முதல் அட்டேட்கள் முதல், உற்சாகம் பெரிய அளவில் உயர்ந்தது. மேலும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வெற்றியை தரும் முக்கியமாக கருதப்பட்டது. படத்தின் தலைப்பு தங்கலான் என்று அறிவிக்கப்பட்டபோது ஸ்டுடியோ க்ரீன் தங்கள் கைகளில் ஒரு பெரிய வெற்றியாளர் இருப்பதாக நம்பியது. ரஞ்சித்தின் சிந்தனைக்கு உயிர்கொடுக்க பல முயற்சிகளில் இறங்கினர். இதனால் படம் பலதரப்பட்ட இடங்களில் படமாக்கப்பட்ட நிலையில், சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மிகவும் திறமையான நடிகர்களைக் கமிட் செய்ய தூண்டியது.

படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து, வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு அதன்பிறகு பின்வாங்கப்பட்டது. இதையடுத்து, மற்றொரு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த தேதியிலும் வெளியிட முடியாமல் போனது. இதற்கிடையில், ஞானவேலின் ஸ்டுடியோ கிரீன் மிகவும் பெரிய முயற்சியில் ஈடுபட்டது. கோலார் தங்க வயல்களில் அமைக்கப்பட்ட ஒரு கால மாயாஜால யதார்த்தக் கதையை மட்டும் நம்பி இந்த படத்தை தயாரிக்கவில்லை. ஆனால் கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பீரியட் ஆக்ஷன் கதையை நம்பி இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

ஒரு பக்கம் தங்கலான் படத்தை வெளியிட தயாராகி வரும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அடுத்து, சூர்யா – சிவா கூட்டணியில், தயாராகியுள்ள கங்குவா என்ற வரலாற்று படத்தை வெளியிட தயாராகி வருகிறது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தங்கலன் இசை வெளியீட்டு விழாவின் போது ரஞ்சித் பேசுகையில், “நிஜமாகவே நிறைய பேர் என்னிடம் ஞானவேல் சார் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டு அவருடன் ஏன் வேலை செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். சர்ப்பட்டா படத்துக்குப் பிறகு எனக்கு நிறைய ஆஃபர்கள் வந்தாலும், ஞானவேல் சாருடன் வேலை செய்யணும்னு நிச்சயமா இருந்தேன்.

நான் அவருக்கு ஆதரவாக நிற்க விரும்பினேன். அந்த நம்பிக்கைக்கு ஈடாக அவர் கொடுத்தது தங்கலான். அதிகரித்து வரும் பட்ஜெட் குறித்து நான் கவலைப்பட என்னை விட்டதே இல்லை. எனக்கு சுதந்திரம் கொடுத்தார். தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை திருப்பி கொடுக்கும் பொறுப்பும் எனக்கு உள்ளது. நீங்கள் தயாரிப்பாளர் மட்டுமல்ல எனது பெரிய ஆதரவாளர் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Gnanavel Raja Pa Ranjith Vikram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment