Advertisment

திக்கு முக்காட வைத்த பாலிவுட் நடிகைகளின் ஆகஸ்ட் லுக்!

Anushka Sharma, Priyanka Chopra, Kareena Kapoor: டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியின் நீதிபதியாக இருக்கும் கரீனா, எண்ணற்ற தோற்றங்களில் வருவதால், அதில் எது சிறந்தது என தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
August fashion file

ஆகஸ்ட் மாத ஃபேஷன்

August Look of Bollywood actresses: பாலிவுட் பிரபலங்கள் பெரும்பாலும் நம்முடைய பேஷன் தாகத்திற்கு, பெரிய உத்வேகத்தை வழங்குகிறார்கள். அதில் ஆகஸ்ட் மாதம் எந்த குறையும் வைக்கவில்லை. பிரியங்கா சோப்ராவின் பேன்ட் சூட் தோற்றத்திலிருந்து அனுஷ்கா சர்மாவின் எத்னிக் தோற்றம் வரை, பலரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஆகஸ்டின் மிகவும் குறிப்பிடத்தக்க சில தோற்றங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

Advertisment

August Fashion: Anushka Sharma பச்சை நிற பூக்கள் பிரிண்ட்களைக் கொண்ட, சப்யாசாச்சி முகர்ஜி புடவையில் ஜொலிக்கிறார் அனுஷ்கா. இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் பூக்கள் டிஸைன் உள்ள இந்த புடவையின் பார்டர் மணிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிம்பிளான ஸ்ட்ராப் பிளவுஸுடன் இதனை அனுஷ்கா அணிந்துள்ளார். இதனுடன் பெரிய காதணிகளை மேட்ச் செய்திருக்கிறார். அந்த தங்கக் காதணிகளில் வைரங்கள், மாணிக்கம் மற்றும் எமரால்ட் கற்கள் உள்ளன.

August Fashion: Priyanka Chopra பிரியங்கா சோப்ராவின் பேண்ட் சூட் தோற்றம் இந்த மாதம் பல ஃபேஷனிஸ்டாக்க்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மெஷ் டாப்புடன் அந்த பவ் அத்தனை அழகாக உள்ளது. இதற்கு போனிடெயில் மிக நேர்த்தியாக பொருந்துகிறது. இங்கு மேக்கப்பைப் பற்றி பேசுவது அவசியம். ஒப்பனை கலைஞர் பாட்டி டப்ராஃப் பிரியங்காவின் முகத்தில் மந்திரம் செய்துள்ளார். விங்க்டு ஐலைனர், பிங்க் ஷாடோ அத்தனை அழகாக இருக்கிறது பிரியங்காவின் இந்தத் தோற்றத்தில்.

August Fashion: Kareena Kapoor வடிவமைப்பாளர்கள் கவுரி நைனிகாவின் டேங்கரின் ஆடையில் தோன்றினார் கரீனா. டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியின் நீதிபதியாக இருக்கும் கரீனா, எண்ணற்ற தோற்றங்களில் வருவதால், அதில் எது சிறந்தது என தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருக்கிறது. ஒன் ஷோல்டர் காக்டெய்ல் ஆடையில் இருக்கும் கரினா, மேக்கப்பை பொறுத்தவரை, நியூட் லிப்ஸ், கருமையான விழிகளில் காட்சியளிக்கிறார்.

August Fashion: Taapsee Pannu சமீபத்தில் வெளியான ‘கேம் ஓவர்’ திரைப்படத்தின் மூலம், பார்வையாளர்களைக் கவர்ந்த டாப்ஸி பன்னு, ’மிஷன் மங்கள்’ புரொமோஷனுக்கு அட்டகாசமான புடவையில் வந்தார். பிரிண்டட் சேலை, காண்ட்ராஸ்ட் பிளவுஸுடன் மேட்ச் செய்யப்பட்டது. இடுப்பில் ஒரு பெல்ட், மிராஜ் லேபிள் காதணிகள் என வாவ் சொல்ல வைத்தார் டாப்ஸி. 

August Fashion: Alia Bhatt ருச்சிகா சச்தேவா வடிவமைத்த ஐஸ் ப்ளூ கிரே கலர்உடையில் ஆலியா பட் காணப்பட்டார். ஸ்லீவ்ஸில் வெள்ளை கோடுகள், ஃப்ளேர்டு பேண்டுடன் சட்டை மேட்ச் செய்யப்பட்டிருந்தது. தூக்கிக் கட்டப்பட்ட முடி, டியூ மேக்கப்பால் ரசிக்க வைத்தார் ஆலியா.

August Fashion: Jahnvi Kapoor ஜான்வி கபூரின் புடவை தோற்றம் பிரமிப்பைத் தந்தது. வண்ணமயமான பூக்கள் பார்டரைக் கொண்ட வெள்ளை நிற புடவை. அதற்கு பஸ்டையர் பிளவுஸை மேட்ச் செய்திருந்தார்.சாண்டிலியர் கம்மல்களுடன், கன்னங்களை ஹைலைட் செய்து, கண்களுக்கு மை தீட்டி, சாஃப்ட் லிப்ஸ்டிக் போட்டிருந்தார்.

Anushka Sharma Taapsee Pannu Priyanka Chopra Kareena Kapoor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment