/indian-express-tamil/media/media_files/2025/09/10/screenshot-2025-09-10-130240-2025-09-10-13-03-04.jpg)
‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு’ பாடல் குறித்த சுவரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அருமையான படைப்புகளில் இன்றும் நினையில் இருக்கும் ஒரு படைப்பு ‘அவள் ஒரு தொடர் கதை’. சுஜாதா, ஜெய் கணேஷ் உட்பட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த மறக்க முடியாத பாடலாய் அமைந்த ‘தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு’ பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியிருந்தார்.
இந்த பாடல் உருவான கதை குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, “பாலசந்தர், கண்ணதாசனிடம் சொல்கிறார். அண்ணன் தங்கையை திட்டுகிறார் அதுதான் சிட்டிவேசன். ஆனால் பாடல் நேரடியாக குடும்ப உறவுகளை விளக்குவது போல் அமையாமல் ஒரு சித்தர் பாடல் போன்று இருக்க வேண்டும் என்கிறார். கண்ணதாசன் யோசிக்கிறார்..யோசிக்கிறார்.. பாடல் எழுத முடியவில்லை.
இரண்டாவது நாள் அமர்கிறார்கள் எழுத முடியவில்லை. மூன்றாவது நாள் உட்காருகிறார்கள். ஒரு டியூன் ஒரு மெலடி டியூன் போட்டு வச்சிருக்க. அந்த ஆள் என்னனா சித்தர் பாட்டு மாதிரி வேணும்னு சொல்றாரு. அண்ணன் தங்கையை திட்கிறார் என்று சொல்கிறார். அண்ணன் தங்கையை திட்டும் பொழுது எப்படி மெலடி வரும்?
நீ மெலடி டியூன் போட்டு வைத்திருக்கிறார். டியூனை மாற்று என்று கண்ணதாசன் கூறுகிறார். அப்போது எம்.எஸ்.வி சொல்கிறார் டியூனை மாற்ற முடியாது. இரண்டு பேரும் என்ன பகையாளிகளா? அண்ணன் தானே தங்கையை திட்டுகிறார். அதனால் நான் டியூனை மாற்றமாட்டேன் என்று எம்.எஸ்.வி கூறுகிறார்.
முயற்சிக்கிறார் மூன்றாவது நாளும் கண்ணதாசனால் எழுத முடியவில்லை. எம்.எஸ்.வி நான் செல்கிறேன் என்று கம்பெனி காரில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது மழை பெய்கிறது. அந்த வேளையில் தயாரிப்பாளரை பார்த்து கண்ணதாசன் தனக்கு பிடித்தமான சில விஷயங்களை வாங்கி வரச் சொல்கிறார். தயாரிப்பாளருக்கு கோபம் வருகிறது.
மூன்று நாட்களாக பாட்டு எழுத முடியவில்லை. உனக்கு இதலாம் வாங்கி தர முடியாது. மழைக்கு ஒதுங்குவதற்கு என் அலுவலகமாவது இருக்கு என்று நினைத்துக் கொள் என்று சொல்கிறார். இதை சொன்னதும் கண்ணதாசனுக்கு கோபம் வந்துவிட்டது. ஏன் எனக்கு மழைக்கு ஒதுங்குவதற்கு வேறு இடம் இல்லையா? உன் அலுவலகம் இல்லையென்றால் என்ன தெய்வம் தந்த வீடு தெரு இருக்கிறது என்று சொல்கிறார்.
பின்னர் அந்த டியூன் என்ன தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு இதான் பல்லவி வர சொல்லு எம்.எஸ்,வியை என்று சொல்கிறார். எம்.எஸ்.வி காரில் போய் இறங்குகிறார். அப்போது வீட்டில் உள்ள தொலைபேசிக்கு போன் வருகிறது. உங்களை உடனே புறப்பட்டு வரச் சொலிறார்கள் என்று மறுபடியும் எம்.எஸ்.வி வருகிறார். கண்ணதாசன் அருவியாக கொட்டித் தீர்க்கிறார் வார்த்தையை அன்று இரவு முழுவதும் விழித்திருந்து அதிலிருந்து ஒரு நான்கு சரணங்களை எடுப்பதற்குள் படாதபாடு பட்டுவிட்டேன் என்று பாலசந்தர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.