அவெஞ்சர்ஸ் பட வரிசையில், 4-ம் பாகம் வரும் 24-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
இவற்றிற்கு உலகெங்கும் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக இந்திய ரசிகர் பட்டாளம் ஏராளம். முதலில் இந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் ஆந்தெம் பாடலை கம்போஸ் செய்ய நம்ம இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இதற்கான ஆன்தெம் பாடலை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில் நேற்று அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் மார்வெல் ஆன்தெம் பாடல் இந்தியில் வெளியானது.
இது ரஹ்மான் ரசிகர்களுக்கும். அவெஞ்சர்சர்ஸ் வெறியர்களுக்கும் அறுசுவை விருந்து படைத்தது.
Enthiran Climax Scene
இந்நிலையில் ஆன்தெம் வெளியீடு மற்றும் புரொமோஷனுக்காக அவெஞ்சர்ஸ் இயக்குநர்களில் ஒருவரான ஜோ ரஸ்ஸோ இந்தியா வந்திருக்கிறார்.
அவர், நடிகர் ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ராய் நடித்திருந்த ‘எந்திரன்’ படத்தின் காட்சியில் இன்ஸ்பையராகி அவெஞ்சர்ஸில் ஒரு படமாக்கப்பட்டது. கிளைமேக்ஸ் காட்சியில், அனைத்து ரோபோக்களும் இணைந்து ஒரே ரோபோவாக மாறும் அதே போன்று, ’அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ படத்திலும் ஒரு காட்சி இருந்தது. ஆனால் நீளம் கருதி பின்பு அது நீக்கப்பட்டது” என்றார்.
2010-ல் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான எந்திரன் படம் உலகம் முழுக்க பல கோடி வசூல் செய்து, மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது!