avengers ticket booking : உலகளவில் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவெரஞ்சர்ஸ் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் திரையில் விருந்து படைத்துள்ளது என்றே கூறலாம்.
இப்படத்திற்கான தமிழ் வசனத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருந்தார். அதேபோல், இப்படத்தில், அயன்மேன் கதாபாத்திரத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி டப்பிங் கொடுத்திருந்தார்.படம் குறித்த விமர்சனம் அனைத்து தரப்பில் பாராட்டுக்களை அளித்து குவித்திருக்கும் நிலையில், படம் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனையை செய்து வருகிறது.
நகரங்களில் சில தியேட்டர்களில் நேரடி ஆங்கிலத்திலும், பல தியேட்டர்களில் தமிழ் டப்பிங் செய்யப்பட்டும் இப்படம் வெளியானது. ரசிகர்களிடையே இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்ததால் முன்பதிவு மட்டுமே ரூ.40 கோடியை தொட்டதாக திரைத்துறை வட்டாரங்களில் கூறப்பட்டது. ரஜினி, அஜித், விஜய் என முன்னனி ஹீரோக்களின் படங்கள் கூட இந்த அளவுக்கு முன்பதிவையும், வரவேற்பையும் பெறவில்லை என திரையரங்க உரிமையாளர்கள் கூறி இருந்தனர்.
இந்நிலையில், அவெஞ்சர்ஸ் திரைப்படம் உலகளவில் முதல் நாள் மட்டும் 169 மில்லியன் அதாவது, 1,186 கோடி முதல் நாள் வசூல் அள்ளி குவித்திருப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் மட்டும் அவெஞ்சர்ஸ் திரைப்படம் முதல் நாள் வசூலாக 107 மில்லியன் இந்திய மதிப்பில் இது 750 கோடி வசூலித்திருப்பாத தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தான் சீனாவில் முதல் நாளில் ஒரு திரைப்படம் பெற்றிருக்கும் அதிகப்பட்ச வசூலாகும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/04/sachin-4-300x169.jpg)
இந்த வாரத்தில் அவெஞ்சர்ஸ் படத்தின் வசூல் இப்படியே தொடர்ந்தால் அவெஞ்சர்ஸ் வார இறுதியில் உலகளவில் 5000 கோடி வசூல் செய்து மாபெரும் உலக சாதனை படைக்கும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநோயகஸ்தர்கள் கணித்துள்ளனர்.
ஹாலிவுட் படத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய வசூல் ஓப்பனிங் நிகழ்ந்தது அவெஞ்சர்ஸ் படத்திற்கு தான் என்ற தகவல்களும் தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கின்றனர். அதே இந்தியாவில் மட்டும் அவெஞ்சர்ஸ் திரைப்படம் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூல் இன்று மாலை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.