Advertisment

Avengers Endgame in Tamilrockers: ஹாலிவுட் 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படத்தையும் பந்தி பறிமாறிய தமிழ் ராக்கர்ஸ்

Tamilrockers Leaked Avengers Endgame Before its Release: ஹாலிவுட் காரனையும் மிரட்ட ஆரம்பித்து விட்டது தமிழ் ராக்கர்ஸ். இதற்கு என்ன முடிவு என்பது யாருக்கும் தெரியவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Avengers Endgame in Tamilrockers, Tamilrockers Leaked Avengers Endgame

Avengers Endgame in Tamilrockers, Tamilrockers Leaked Avengers Endgame

Avengers Endgame Leaked in Tamilrockers for Free Download: ந 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம், தமிழ் ராக்கர்ஸில் லீக் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆக கோலிவுட், பாலிவுட் என்றில்லாமல், ஹாலிவுட்டையும் விடவில்லை தமிழ் ராக்கர்ஸ்.

Advertisment

தமிழ் ராக்கர்ஸுக்கு பெரிய இன்ட்ரோ தேவை இல்லை. இன்றைய தேதியில், தமிழகத்தில் தமிழ் சரியாக தெரியாதவர்களுக்குக் கூட தமிழ் ராக்கர்ஸ் தெரியாமல் இருப்பதில்லை. பல கோடி ரூபாய் முதலீடு செய்து தியேட்டரில் ரிலீசாகும் படங்களை, தங்களது தளத்தில் கள்ளத் தனமாக வெளியிட்டு வரும் இந்த குரூப் இதுவரை எங்கிருந்து செயல்படுகிறது என்பதையே கண்டறிய முடியவில்லை(?).

TamilRockers Leaked Avengers Endgame Full Movie To Free Download In Online: அவெஞ்சர் எண்ட் கேம் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் TamilRockers Leaked Avengers Endgame Full Movie To Free Download In Online: அவெஞ்சர் எண்ட் கேம் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

Avengers Endgame Full Movie Download In Online Leaked By TamilRockers: அவெஞ்சர் எண்ட் கேம்

சினிமா மட்டுமல்லாது, ஹாலிவுட் வெப் சீரிஸ்களில் தொடங்கி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரை அனைத்தையும் லீக் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் ஏப்ரல் 26-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், முன் தினமே தமிழ் ராக்கர்ஸில் இப்படம் கள்ளத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது. பலரும் இப்படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்து, கதையை வெளியே கசியவிட்டு வருகின்றனர்.

இருப்பினும், பெரும்பாலான ரசிகர்கள், இப்படத்தின் மேஜிக் மற்றும் பிரம்மாண்டத்தை தியேட்டரில் தான் அனுபவிக்க வேண்டும் என்று கூறி டவுன்லோட் செய்யாமல் இருக்கின்றனர். உலக அளவில் இப்படம் அட்வான்ஸ் புக்கிங்கில் பெரும் சாதனை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் காரனையும் மிரட்ட ஆரம்பித்து விட்டது தமிழ் ராக்கர்ஸ். இதற்கு என்ன முடிவு என்பது யாருக்கும் தெரியவில்லை.

Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment