/tamil-ie/media/media_files/uploads/2019/10/sachin-9.jpg)
vijay tv dd
vijay tv dd : விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி எனப்படும் திவ்யதர்ஷினி தான். சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் திவ்யதர்ஷினி. இவர் தற்பொழுது சினிமாவிலும் நடித்து வருகிறார். சிறு சிறு வேடத்தில், பிரபல தொலைக்காட்சியான விஜய்டிவி தான் பல பிரபலங்களை வளர்த்து விட்டது இவரையும் சேர்த்து.
1999-ஆம் ஆண்டு சின்னத்திரையில் கால் பதித்த திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் 'உங்கள் தீர்ப்பு' நிகழ்ச்சியின் மூலம் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானார். 2002-ஆம் ஆண்டு ராஜ் டிவியில் கே.பாலசந்தரின் 'ரெக்க கட்டிய மனசு' சீரியலிலும் நடித்துள்ளார்.
இவருக்கு, 'காஃபி வித் டிடி' ஷோ மூலம் மிகப்பெரிய ரீச் கிடைத்தது. அதன்பின் வெள்ளித்திரையில் 'நள தமயந்தி', 'விசில்', 'பவர் பாண்டி', 'சர்வம் தாளமயம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவரது 20 ஆண்டுகாலபணியை பாராட்டி 20 இயர்ஸ் ஆப் டிடி என்ற விழாவும் கொண்டாடப்பட்டது.டிடியின் தனிப்பட்ட பர்சனல் வாழ்க்கை ஆயிரம் விமர்சனங்களை சந்தித்திருந்தாலும் டிடி முகத்தில் அந்த சிரிப்புக்கு மட்டும் பஞ்சமே இருக்காது. அவர் மட்டுமில்லை தன்னுடன் இருப்பவர்களை எப்போதுமே சந்தோஷமாக வைத்திருப்பார். இந்த ஒரு காரணம் மட்டுமில்லை டிடியின் பேச்சில் இருக்கும் ஈர்ப்பு அப்படி ஒரு மேஜிக். ஈஸியாக அனைவரிடமும் ஒன்றி விடுவார்.
சிறிய இடைவெளிக்கு பின்னர் விஜய் டிவியில் ‘என்கிட்ட மோதாதே 2 ‘என்ற நிகழ்ச்சி மூலம் மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கினார். டிடி. இதுவரை தொகுப்பாளினியாகும், நடிகையாகம் இருந்த டிடி ஒரு பிரபல வானொலியில் RJ-வாக டிடி களம் இறங்கியுள்ளார்.கேரள ரொமான்ஸ் ஸ்டார் டொவினோ தாமசுடன் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு காதல் பாடலில் கூட ரோமான்ஸில் அசத்தி இருந்தார்.
எப்போதுமே கூகுளில் அதிகமாக தேடப்படும் ஆங்கர் லிஸ்டில் டிடிக்கு தான் முதலிடம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.