சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள அயலான் திரைப்படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் விஎஃப்எக்ஸ் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'அயலான்'. ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், யோகி பாபு, கருணாகரன், இஷா கோப்பிகர், பானு ப்ரியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அடுத்து வரவிருக்கும் கவனிக்கப்பட வேண்டிய படங்களின் வரிசையில் முன்னணியில் இருந்து வரும் அயலான் படம் வேற்றுகிரகவாசிகளின் விஷயத்தைக் அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தில் அற்புதமான விஎஃப்எக்ஸ் (VFX) வேலைக்காக டீஸர் சிறப்பான பாராட்டைப் பெற்றது.
இப்போது, படத்தின் விஎஃப்எக்ஸ் (VFX) வேலைகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை வெளிப்படுத்த தயாரிப்பாளர்கள் படத்தின் சில விஎஃப்எக்ஸ் ஸ்டில்களைப் பகிர்ந்துள்ளனர். விஎஃப்எக்ஸ் பிரேம்களை உண்மையானதாக மாற்ற தயாரிப்பாளர்கள் நிறைய கடின உழைப்பை கொடுத்துள்ளனர். இந்தப் பார்வையில், ‘அயலான்’ ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது.
அயலான்' 1000 க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் (VFX) பிரேம்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில், சிவகார்த்திகேயன் நடித்த தமிழ் திரைப்படம் அதிக எண்ணிக்கையிலான விஎஃப்எக்ஸ் (VFX) பிரேம்களைக் பெற்றுள்ளது. 100 நாட்களுக்குள் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்திற்கு விரிவான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தேவைப்படுவதால், கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக தயாரிப்பில் உள்ளது.
'அயலான்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஒரு முக்கியமான வேடத்தில் ஒரு நகைச்சுவையான வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் உள்ளது, மேலும் கற்பனை அறிவியல் படமான அயலான் அனைத்து தலைமுறை பார்வையாளர்களையும் மகிழ்விக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“