Tamil Movies For Free Download, Kanchana 3, Kee, Ayogya Are The Latest Victims Of TamilRockers: விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படமான அயோக்யா, ரிலீஸ் தினத்தன்றே ஆன் லைனில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் முழுமையாக வெளியிட்டது.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், சினிமா உலகுக்கு பெரும் மிரட்டலாக இருந்து வருகிறது. சூப்பர் ஸ்டாரின் 2.0, பேட்ட, அஜீத்தின் விஸ்வாசம், தனுஷின் மாரி 2 என எந்த ஹீரோவின் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைக்கவில்லை.
Kanchana 3 and Ayogya are the latest victims of TamilRockers: விஷால் படத்திற்கும் இந்த நிலையா?
Ayogya Full Movie leaked to Free Download In TamilRockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான அயோக்யா
கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ரிலீஸான காஞ்சனா 3 படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பு உள்ளது. அந்தப் படத்தையும் ரிலீஸ் தினத்தன்றே ஆன் லைனில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.
இந்தச் சூழலில் வெங்கட் மோகன் இயக்கத்தின், விஷால், ராஷிகன்னா, பார்த்தீபன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் நடிப்பில் நேற்று (மே 11) வெளியான படம் அயோக்யா. இந்தப் படம் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் ரீமேக் ஆகும். இந்தியிலும் சிம்பா என்ற பெயரில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.
Read More: பார்த்தீபன் படத்தை உல்டா செய்து.... அவரையே நடிக்க வைத்து... அடடே ‘அயோக்யா’
தமிழில் இந்தப் படம் நேற்று ரிலீஸான சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இந்தப் படத்தை முழுமையாக வெளியிட்டது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தொடர்ந்து இதுபோல புதுப்படங்களை திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.
என்னதான் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை இணைய சேவை நிறுவனங்கள் மூலமாக தமிழ் ராக்கர்ஸை முடக்கினாலும், புதுப்புது ஐ.டி.களில் முளைத்து ஆன் லைனில் படங்களை வெளியிட்டு வருகிறது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷாலின் படமும் அதற்கு பலியாகி வருவது வேடிக்கையான வேதனை.