scorecardresearch

பார்த்தீபன் படத்தை உல்டா செய்து…. அவரையே நடிக்க வைத்து… அடடே ‘அயோக்யா’

R.Parthiepan about Ayogya:: ‘94-ல் வெளியான என் அக்மார்க் ginal ginal original ‘உள்ளே வெளியே’படத்தை In&out லவுட்டி Temper’என்று(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது! அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு ‘அ……த்த்த்தனம்’?

ayogya Dubbed From Ulle Veliye, parthiban, அயோக்யா, உள்ளே வெளியே, இரா.பார்த்தீபன்
ayogya Dubbed From Ulle Veliye, parthiban, அயோக்யா, உள்ளே வெளியே, இரா.பார்த்தீபன்

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான அயோக்யா படம், நடிகர் பார்த்தீபனின் ‘உள்ளே வெளியே’ படத்தின் உல்டா என்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் நடித்த பார்த்தீபனும் கொந்தளிப்பாக கருத்து கூறியிருக்கிறார்.

நடிகர் விஷால் நடிப்பில், ‘அயோக்யா’ படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் இயக்குனரும் நடிகருமான இரா.பார்த்தீபன் வில்லனாக நடித்திருக்கிறார். படத்தைப் பார்த்த பலரும் இது பார்த்தீபன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான ‘உள்ளே வெளியே’ படத்தின் உல்டா என கருத்து கூறினர்.

ayogya Dubbed From Ulle Veliye, parthiban, அயோக்யா, உள்ளே வெளியே, இரா.பார்த்தீபன்

அதை நிரூபிக்கும் வகையில் பார்த்தீபன் இன்று தனது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். ‘’அயோக்கியா’த்த்த்தனம்!’ என தலைப்பிட்டு அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘94-ல் வெளியான என் அக்மார்க் ginal ginal original ‘உள்ளே வெளியே’படத்தை In&out லவுட்டி Temper’ என்று (Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது! அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு
‘அ……த்த்த்தனம்’? குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி இருக்கும்? வழக்கு வாதாட்டம் செய்யாமல், பெருமையுடன் பதிவிடுகிறேன். பாருங்கள் இன்றே அயோக்கியா’. விரைவில் என்’உள்ளே வெளியே 2′ என வேதனை பொங்க கருத்து பதிவு செய்திருக்கிறார் பார்த்தீபன்.

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Ayogya tamil movie ulle veliye parthiepan