Actor Vishal's Ayokya movie release : நடிகர் விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஷால் தனது டுவிட்டர் தெரிவித்திருக்கிறார்.
Advertisment
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள அயோக்யா படத்தின் திரை வெளியீட்டு உரிமையை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள அயோக்யா வரும் ஏப்ரல் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ayokya movie release : அயோக்யா ரிலீஸ் தேதி அறிவிப்பு
கடந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியான விஷாலின் இரும்புத்திரை நூறு நாட்களை கடந்து அவருக்கு மாபெரும் வெற்றியை ஈட்டி தந்தது.
Advertisment
Advertisements
அதே போன்ற ஒரு வெற்றியை அயோக்யா படமும் பெற்றுத் தரும் என நடிகர் விஷால் மற்றும் படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர். அயோக்யா படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார்.