Ayudha Ezhuthu Serial: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ‘ஆயுத எழுத்து’. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இந்த சீரியலின் ஹீரோ, ஹீரோயின்கள் மாற்றப்பட்டார்கள். சப் கலெக்டர் இந்திரா கேரக்டருக்கு சரண்யாவும், சக்திவேல் கதாபாத்திரத்திற்கு ஆனந்தும் மாற்றப்பட்டார்கள்.
Advertisment
ஊரில் அடாவடி செய்யும் காளியம்மாவின் மகன் தான் சக்தி. தனது அம்மாவின் எல்லா தவறுகளுக்கும் சக்தியும் உடந்தையாக இருக்கிறான். இந்திராவிடம் தான் காளியம்மாவிடம் உளவு பார்ப்பதாக சொல்லி ஏமாற்றி வருகிறான். சக்தியின் அப்பாவும் மகனின் பொய்க்கு உடந்தையாக இருக்கிறார்.
காளியம்மாவின் ரூல்ஸால் அந்த ஊரில் ஒரு குழந்தையும் படிக்கவில்லை. அவரது பிள்ளைகளும் படிக்க வில்லை. ஆனால், தான் லண்டனில் சென்று படித்து வந்ததாக இந்திராவிடம் சொல்கிறான் சக்தி. சப் கலெக்டரான இந்திராவுக்கு அவன் படித்தவனா, படிக்காதவனா என்றுக் கூட வித்தியாசம் தெரியவில்லை. சக்தியும், இந்திராவும் காதலிக்க, தனது அம்மா காளியம்மாவுக்கு தெரியாமல் அவளை திருமணம் செய்துக் கொள்ள போகிறான் சக்தி.
Advertisment
Advertisements
தனது எதிரியான இந்திராவுக்கு கல்யாணம் என்று மட்டும் தான் காளியம்மாவுக்கு தெரியும். யார் மாப்பிள்ளை என்று அவருக்கு தெரியாதாம். கல்யாண மண்டபத்தில் மற்ற இரு பிள்ளைகள் மூலம் குண்டு வைத்து விடுகிறார். மாப்பிள்ளை சக்தி தான் என்று, காளியம்மாவை பிரிந்து இருக்கும் அவரது, கணவர் சொன்னதும் அதிர்ச்சியில் உறைகிறார். பின்னர் திருமணம் முடிந்ததும், அங்கு செல்லும் காளியம்மா, இந்திராவைப் பார்த்து நான் தான் சக்தியின் அம்மா என்கிறார் (ட்விஸ்ட்டாம்மா).
பொதுவாக சினிமாவோ, சீரியலோ சில தவிர்க்க முடியாத லாஜிக் மீறல்களை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்வதைப்போல், ஆயுத எழுத்து சீரியலில் இந்திராவோ சப் கலெக்டர். சாமானியனுக்கு எழும் சந்தேகமும், கேள்வியும் ஏன் சப் கலெக்டருக்கு எழவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.