/indian-express-tamil/media/media_files/2025/08/14/ayyanar-thunai-2025-08-14-16-28-09.jpg)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அய்யனார் துணை' சீரியல், வழக்கமான மாமியார்-மருமகள் சண்டை போன்ற கதைகளுக்கு மத்தியில், நான்கு சகோதரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் பயணிக்கிறது. சோழன், சேரன், பாண்டியன், பல்லவன் எனப் பெயரிடப்பட்ட நான்கு சகோதரர்களின் வீட்டைச் சுற்றியே இந்த சீரியல் நகர்கிறது. இதில் சேரன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்து, மக்களிடையே பிரபலமான ரேஷ்மா ரெட்நூல் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில், சீரியலில் தான் நடித்த கார்த்திகா கதாபாத்திரம் மற்றும் சீரியல் படப்பிடிப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
அய்யனார் துணை சீரியலில் கார்த்திகா - சேரன் என்ற கதாப்பாத்திரத்திற்கு முன்னாவுடன் இணைந்து ரேஷ்மா நடித்திருந்தார். இந்த ஜோடி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த அன்பிற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அய்யனார் துணை சீரியலில் சேரன் மாமாதான் கடைசி வரை வேண்டும் என்றுதான் சொன்னேன், ஆனால் பெற்றோர்கள் மறுத்ததால் அதுமுடியாமல் போய்விட்டது. நான் யாரையும் ஏமாத்தல, என ரேஷ்மா கூறியுள்ளார். சீரியலில் கூட கார்த்திகா சேரனுக்குதான் என்று நினைத்த ரசிகர்களுக்கு அவர்கள் சேர்மால்போனது அதிர்ச்சியான ஒன்றாகும்.
வீடியோ கால் வாயிலாக ரேஷ்மாவை வாழ்த்திய நடிகர் முன்னாவும், அய்யனார் துணை சீரியலில் ரேஷ்மாவுடன் இணைந்து நடித்த நாட்களை நினைவுகூர்ந்தார். மேலும் கார்த்திகா - சேரன் கதாபாத்திரம் பிரபலமடைந்ததற்கு, ரேஷ்மாவின் இயல்பான நடிப்பே காரணம் என்றும் அவர் பாராட்டினார்.
அய்யனார் துணை சீரியலில் இணைந்து நடித்த அனுபவங்களைக் கூறிய முன்னா, ரேஷ்மாவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் ஒரு நடிகையாகக் கொண்டுள்ள இரண்டு சிறந்த குணங்களான, சக நடிகர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் குணம் மற்றும் சிறிய வாய்ப்பிலும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் குணம் ஆகியவற்றை முன்னா குறிப்பிட்டார். விரைவில் இருவரும் மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் முன்னா தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
ரேஷ்மா, அய்யனார் துணை சீரியலில் கடைசி வரை சேரன் மாமாவுடன் ஜோடியாகத் தொடரவே விரும்பியதாகவும், ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போனதாகவும் விளக்கமளித்தார். இதன் மூலம் யாரையும் தான் ஏமாற்றவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.