இன்வான் ப்ரொடக்ஸன்ஸ் தயாரிப்பில் நடிகைகள் நேகா தேஷ் பாண்டே, பெஃரா, மீலு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "அழகான ராட்ஸிகள்" திரைப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 27) நடைபெற்றது. கோயம்புத்தூர் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் ரோபோ ஷங்கர் அவரது மனைவி, மகள் இந்திரா மற்றும் திரைப் படக் குழுவினர் பங்கேற்றனர்.
Advertisment
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை மாநகர மத்திய உதவி காவல் ஆணையர் சேகர் இசைத் தட்டை வழங்க நடிகர் ரோபோ ஷங்கர் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் இல்யாஸ் இவ்வளவு வேகமாக இந்த படத்தின் இசை வெளியீடு நடப்பது மிகவும் மகிழ்ச்சி. படம் விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்தார்.
நடிகை பெஃரா பேசும் போது, தன்னுடைய முதல் தமிழ் படம் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது. நினைத்து பார்க்க முடியாத அளவு விரைவில் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நடிகை மீலு, அடுத்த படமும் தமிழில் நடிக்க வேண்டும் என்ற வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் தன்னுடைய பெரிய ஆதரவு தன் அம்மா தான், தனது தாய் நினைக்கிற அளவுக்கு பெரிய இடத்திற்கு நான் போவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.
Advertisment
Advertisements
இறுதியாக பேசிய நடிகர் ரோபோ ஷங்கர், அப்துல் கலாமின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தில் இசை வெளியீட்டு விழா நடத்தது மகிழ்ச்சி. குறைந்த காலத்தில் படத்தை எடுத்து முடிப்பது சாத்தியமானது கிடையாது. அதற்காக இயக்குநருக்கு நன்றி.
அடுத்த படத்திற்கு சார்ஜாவிற்கு தயாரிப்பாளர் அழைத்து செல்வதாக கூறி இருப்பதாகவும் அதற்கும் நான்கு டிக்கெட்டிகள் போட வேண்டும் என கிண்டலடித்த ரோபோ ஷங்கர் இந்த நிகழ்ச்சி இசை வெளியீடு மாதிரி இல்லாமல் ஒரு கார்பரேட் ஷோ மாதிரி இருக்கிறது எனவும் நகைச்சுவையாக கூறினார்.
மேலும் இப்படி ஒரு இசையமைப்பாளரை தான் வாழ்க்கையிலேயே பார்த்தில்லை எனவும் இரவு பகலாக உழைத்து இசையமைப்பாளர் எவ்வளவு இளைத்து போய்விட்டதாக நகைச்சுவையாக பேசினார். எடிட்டரை பார்த்ததும் செண்டை மேளம் வாசிக்கும் நபர் என நினைச்சேன். எடிட்டர் இல்லையாம் கேமிரா மேன். கேமிராமேன் பேசமாட்டார், ஆனால் லென்ஸ் வழியாக பேசி அழகான ராட்ஸிகள் திரைப்படத்தில் பேசி இருக்கிறார்,
இந்த திரைபடத்தின் எழுத்தை படிக்கிறதுக்கு தனக்கு 15 நாட்கள் ஆனது என கவுன்டர்களை அடுக்கிய ரோபோ ஷங்கர், பேன் இந்தியா மூவியா இருக்கும் னு நினைத்தேன் பேன் இந்தியா எடுக்கும் தகுதி இயக்குநருக்கு இருக்கிறது எனவும் திரை;பபடத்தின் எழுத்தில் யோசிக்க வைத்த இயக்குநர் படத்திலும் நம்மளை யோசிக்க வைப்பார் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரோபோ ஷங்கர், ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் போலீசாரின் உடைய போட்டுகொண்டு மவுண்ட் ரோட்டில் நிற்கமுடியாது என போலீசாரின் பணி குறித்து பேசிய ரோபோ ஷங்கர், தங்கள் குடும்பத்திலேயே எல்லோருமே சுயம்பு தான் எனவும் தற்போது தனது அண்ணன் மகன் இந்த படத்தில் நடன இயக்குநராக களமிறங்கியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய், கமல்ஹாசன்,அஜித், விஜய்சேதுபதி ஆகியோரின் குரலில் பேசி அசத்தினார் ரோபோ ஷங்கர். மேலும் இசை வெளியீட்டு விழாக்களை சென்னையில் வேண்டாம். கோயம்புத்தூரில் வையுங்கள் என்றார். தகிட தகிட டேன்ஸ் ஆடுமாறு ரசிகர் கேட்க அதற்கு அந்த மாதிரி, அந்த பாட்டுக்கு அப்படி ஆடக்கூடாது என நகைச்சுவையாக அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறீர்கள் எப்போது ஹீரோவாக நடிக்க போகிறீர்கள் என்ற தொகுப்பாளரின் கேள்விக்கு எப்பொழுதோ மக்கள் மனதில் நான் ஹீரோதான் எனப் பதிலளித்தார். சிரித்துக்கொண்டே இருந்தால் வாழ்க்கை அவ்வளவு அழகாக இருக்கும் கடந்த ஐந்து மாத்ததில் படுத்த படுக்கையாக கிடந்த தான் ஆரோக்கியமாக நிற்பற்கு தனது குடும்பமும், சிரிப்பும் தான் காரணம் எனவும் இப்போது குடும்பமே உடற்பயிற்சி செய்கிறது எனவும் உணவு பழக்கம், உடற்பயிற்சியும் முக்கியம் எனத் தெரிவித்தார்.
தனது மருமகன் ஒரு படம் இயக்கி வருகிறார். அது முடியும் போது ஆறு மாதத்தில் ஒரு நல்ல செய்தி வரும் எனவும் பழைய கஞ்சியும் வெங்காயமும் எனக்கு சிறந்த மருந்தாக தோன்றுகிறது எனவும் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“