Advertisment

இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ’அழகு’ சீரியலில் ரேவதி!

Actress Revathi: ”கோயிலுக்கு போயிருக்கா, வசந்தா வீட்டுக்கு ஓய்வெடுக்க போயிருக்கா, கடைக்குப் போயிருக்கா” என சொல்லி வந்தார்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Azhagu serial Revathi

Azhagu serial Revathi

Sun TV's Azhagu Serial : சன் தொலைக்காட்சியில் நடிகை ரேவதி நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘அழகு’. இதில் அழகம்மை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேவதி. அவருடன் ஸ்ருதி ராஜ், தலைவாசல் விஜய் உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள்.

Advertisment

சினிமா, விளம்பரங்களில் நடிப்பு, குறும்பட இயக்கம் என பிஸியாக இருப்பதாலோ என்னவோ, கடந்த இரண்டு மாதங்களாக அழகு சீரியலில் தலைக்காட்டாமல் இருந்தார் ரேவதி. திரையில் யாராவது அழகு எங்க? எனக் கேட்டால், ”கோயிலுக்கு போயிருக்கா, வசந்தா வீட்டுக்கு ஓய்வெடுக்க போயிருக்கா, கடைக்குப் போயிருக்கா” என மறுமுனையில் இருந்து பதில் வரும். ரேவதியின் கதாபாத்திரமான அழகம்மையை முன்னிலைப் படுத்தும் வகையில் தான் இந்த சீரியலுக்கு ‘அழகு’ என்றே பெயரிடப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ரேவதி சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறாததால், அழகு சீரியலில் இருந்து அவர் விலகி விட்டாரோ என்ற எண்ணம் ரசிகர்களிடம் பரவலாக இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அழகு சீரியலில் நடிக்கத் தொடங்கியுள்ளார் ரேவதி.

Sun Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment