Azhagu Serial : அக்காவை பழி வாங்கும் தங்கை, இது தான் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலின் ஒன்லைன். சுதாவும், பூர்ணாவும் சகோதரிகள், சின்ன வயதிலேயே ஆளுக்கொரு மூலையில் பிரிந்து விடுகிறார்கள். இப்போது சுதா தனது அக்கா என்று பூர்ணாவுக்கு தெரியும், ஆனால் அவள் தன் தங்கை என சுதாவுக்கு தெரியாது. பூர்ணாவின் கெடுபிடியால் தனது மூத்த மகளிடம் உண்மையை சொல்ல முடியாமல், தவிக்கிறார் அவர்களது அம்மா சகுந்தலா.
அக்கா - தங்கை இருவரும் ஒரே குடும்பத்தில் மணம் முடிக்கிறார்கள். அக்கா சுதாவுக்கு தொடர்ந்து பல தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் பூர்ணா. போதாக்குறைக்கு கொழுந்தன் திருநாவின் வாழ்க்கையும் பூர்ணாவால் கேள்விக் குறியாகிறது. திருநாவை திருமணம் செய்துக் கொண்ட அர்ச்சனா குடும்பத்தை, மிகுந்த வேதனைகளுக்கு ஆளாக்குகிறாள் பூர்ணா. இது சம்பந்தமாக அவர்கள் தொடர்ந்த வழக்கில் சிறை செல்கிறாள். ஆனால் அங்கு தானே ஆட்களை வைத்து அடி வாங்கி, அதன் மூலம் நடக்க முடியாதவளாக அனைவரையும் ஏமாற்றுகிறாள்.
Advertisment
Advertisements
வீல்சேரில் உட்கார்ந்து பாவமான முகத்துடன் அவள் செய்யும் வில்லத்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கால் வலி என, சுதாவை எண்ணெய் தேய்த்து விட செய்கிறாள். தன் காலை சுதா பிடித்து விட்டாளே என்ற சந்தோஷம் வேறு அவளுக்கு. இந்த விஷயம் சுதாவின் கணவன் ரவிக்கு தெரிந்தால், அவன் அவள் மீது பயங்கர எரிச்சலடைவானே என்றும் திட்டம் தீட்டுகிறாள் பூர்ணா. பின்னர் அதையும் ரவி முன்பு சொல்லி விடுகிறாள்.
இறுதியாக, ”அவளுக்கு உதவி செய்தால் ரவிக்கு பிடிக்காது என பூர்ணாவுக்கே நன்றாக தெரியுமே. அப்படியிருந்தும் அவள் ஏன் அவ்வளவு நேரம் கழித்து ரவி முன்பு நன்றி சொல்ல வேண்டும்” என சிந்திக்கிறாள் சுதா. பூர்ணாவின் வேடம் கலையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்...