Azhagu serial on Sun TV : சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியல் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது.
Advertisment
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...
அழகம்மையின் இளைய மகன் திருநா, நிவியை காதலிக்கிறான். ஆனால் அவளின் மாமா அவளை மறைத்து வைத்து விட்டு, நிவி இறந்து விட்டதாகக் கூறுகிறான். நிவி இல்லாமல் தன்னால் வாழ முடியாது என தற்கொலைக்கும் முயல்கிறான் திருநா. பின்னர் குடும்பத்தினர் அவனிடம் பேசி, அர்ச்சனாவை திருமணம் செய்ய சம்மதிக்க வைக்கிறார்கள். நிச்சயதார்த்தத்தின் போது, அர்ச்சனாவின் அப்பாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்துவிடுகிறது.
Advertisment
Advertisements
இதற்கிடையே நிவி உயிருடன் இருப்பது தெரிய வருகிறது. முகூர்த்தத்திற்கு முதல் நாள் நிவியை மண்டபத்திற்கு அழைத்து வருகிறான் ரவி. அவளைப் பார்த்த அழகம்மைக்கு அதிர்ச்சி. என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள். இருப்பினும் இது திருநாவின் வாழ்க்கை அவன் தான் முடிவெடுக்க வேண்டும் என்கிறார்கள்.
அர்ச்சனாவுடன் சங்கீத்தில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் திருநாவை தனியே அழைத்து வருகிறான் ரவி. அப்போது நிவியை பார்த்த அவனுக்கு தாரை தாரையாய் கண்ணீர் கொட்டுகிறது. என்னால தான் எல்லா பிரச்னையும், நா இங்க வந்திருக்கவே கூடாது” என்கிறாள் நிவி. மறுபுறம் நமக்குத் தெரியாமல் ஏதோ நடக்கிறது என கண்ணில் விளக்கெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு பருந்து போல நோட்டமிடுகிறாள் பூர்ணா. இதற்கிடையே திருநா யாரை திருமணம் செய்துக் கொள்வான்? பொறுத்திருந்து பார்ப்போம்.