பாகுபலி 2: அந்த ‘சீன்’ பாக்கும் போது கண்ணீர் விட்டு அழுதுட்டேன்…. ரம்யா கிருஷ்ணனுடன் சந்திப்பு

வராலாற்று சிறப்புமிக்க பாகுபலி திரைப்படத்தில் நடித்ததுமிகவும் பெருமையாக இருக்கிறது…

ப்ரியங்கா சுந்தர்

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி-2 திரைப்படமானது சினிமா விமசகர்கள் மத்தியில் சிறந்த படம் என்ற சான்றை பெற்றதோடு, பார்வையாளர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. கதாநாயகனான பிரபாஸ் தனது திறமையை இப்படத்தில் நிரூபித்தது காட்டியிருக்கிறார். கதாநாயகனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படாமல்,  படத்தில் வரும் மற்ற கதாப்பாத்திரங்களும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. குறிப்பாக, முக்கியத்துவம் வாய்ந்த கட்டப்பா, ராஜமாதா சிவகாமி ஆகிய கதாப்பாத்திரங்கள் படம் பார்க்கும் ரசனையை மேலும் அதிகரித்தன. வசூல் மற்றும் திரைப்படம் ரீலிஸ் செய்யப்படும் தியேட்டர் என பல்வேறு முந்தைய சாதனைகளை தகர்த்தெறிந்த பாகுபலி-2, இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சரித்திரம் படைத்தது.

இந்நிலையில், திரைப்படத்தில் உச்சக்கட்ட அதிகாரத்தில் இருந்த ‘சிவகாமி’ ரம்யா கிருஷ்ணன் இந்தியன் எஸ்க்பிரஸுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலின் போது கூறியது என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்…

பாகுபலியில் சிவகாமியாக நடித்ததன் மூலம் ரம்யா கிருஷ்ணனுக்கு ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்து மழை பொழிந்தது. தனது நடிப்பை பாராட்டி ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தது எல்லையற்ற மகிழ்ச்சியை தந்ததாக ரம்யா தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அது குறித்து அவரிடம் கேள்வி கேட்டபோது: மற்ற படங்களை காட்டிலும், பாகுபலியில் குழுவில் நானும் ஒரு அங்கமாக இருந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனது நடிப்பை திரையில் பார்த்து பாராட்டு தெரிவித்த அனைவரின் வாழ்த்துச் செய்திகளையும் கேட்டதில் திக்குமுக்காடி போய்விட்டேன். பாகுபலி படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பின் தொடக்கம் முதல் முடிவு வரை அனைவரும் ஒன்றாக சந்தித்துக் கொண்டோம். ஆனால் தற்போது அவர்களை அடிக்கடி சந்திக்க முடியாமல் போவது கவலையாக தான் இருக்குது.

கடந்த ஐந்து வருடங்களாக சிவகாமி கதாப்பாத்திரத்தில் நடித்தீர்கள். அப்படி இருக்கும்போது சிவகாமி கதாப்பாத்திரம் உங்க தனிப்பட்ட வாழ்க்கையில என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது?
நான் பல திரைபடங்களில் நடித்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். அந்த படங்களை எல்லாம் பாத்தவங்களுக்கு என்னோட முந்தைய நடிப்புத் திறன் தெரியும், அப்படி இருக்கும்பட்சத்தில் அவர்கள் பாராட்டுகள் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும், என்னை தெரியாதவங்க அல்லது என்னுடைய நடிப்பை இதற்கு முன்னதாக திரையில் பார்க்காதவங்க, முதல்முறையா என்னுடைய நடிப்பை பாகுபலி படத்துல பாத்துட்டு பாராட்டுறது கொஞ்சம் வித்தியாசமான அனுபத்தை ஏற்படுத்தியது. அது வேறு விதமான சந்தோஷம். சிவகாமி கதாப்பாத்திரத்துக்கு கிடைச்சிருக்க இந்த அங்கீகாரம், அடையாளம் எல்லாத்தையும் பாக்கும் போது நான் சாதிச்சிட்டத நினைச்சு பெருமைபட்டுக்கிறேன்.

சிவகாமி கதாப்பாத்திரத்துக்கு எப்படி தன்னை ரம்யா தயார் படுத்திக்கிட்டாங்க?
நான் ராஜமெளலி சார் மேல முழுமையா நம்பிக்கை வச்சிருந்தேன். அவர் என்ன செய்யச் சொன்னாரோ அத தான் செஞ்சேன். என்ன செய்யனும்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி நடிச்சேன்.

படையப்பா நீலாம்பரியா நடிச்ச கேரக்டர் ரொம்ப ஸ்டாங்கானது. பாகுபலி படத்துல வரும் சிவகாமிக்கும், படையப்பா நீலாம்பரிக்கும் ஏதாவது ஒற்றுமைகள் இருக்குதா?
படையப்பாவையும், பாகுபலியையும் பார்த்த ரசிகர்கர்களால் ஒற்றுமைகளை அந்த கேரக்டர்ல கண்டு பிடிக்க முடியும்னு நினைக்குறேன். எப்படி இருந்தாலும், ஒவ்வொரு படத்துல வர்ற கதைக்கும், அந்த படத்துக்கு தகுந்த மாதிரி தான் கேரக்டர் இருக்கும். கோபம், சோகம், மற்றும் காதல், அன்பு என உணர்வுகள் எல்லோருக்கும் வர்றது தான். நீலாம்பரி கேரக்டர் ரொம்பவே தனித்துவமானதா இருக்கும். நீலாம்பரி கோபத்தை வெளிப்படுத்துறது எல்லாமே சிவகாமி கேரக்டர்ல இருந்து ரொம்ப மாறுதலா இருக்கும். ஆனா, பாகுபலி படத்துல அதிகார பலம் பொருந்தியவங்கள்ல சிவகாமிக்கு தனி இடம் தான். அதனால அந்த ரெண்டு கதாப்பாத்திரத்துலயும் சில மாற்றங்கள் கண்டிப்பா பாக்க முடியும்.

பாகுபலி படத்த பாக்கும் போது பல சீன்ஸ் ரசிகர்கள் மனச டச் பண்ணீருக்குது. அப்படி உங்க மனச ரொம்ப டச் பண்ண சீன் எது?
வெறுமன டச் பண்ண சீன் அப்படீன்னு ஈஸியா சொல்லீட முடியாது. பாகுபலி டீம்ல இருந்து எல்லோரும் சேர்ந்து, ஹைதராபாத்ல வச்சி படத்த பாத்துட்டு இருந்தோம். அப்போ, கட்டப்பா சிவகாமினு கூப்பிட்டு, உண்மையா என்ன நடந்துச்சுன்னு சொல்லுவாரே, அந்த சீன் பாக்கும் போது என்னையறியாமலே கண்ணீர் வந்துட்டு. அந்த இடத்துல வசனமே இல்லன்னாலும் உணர்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தும் அளவுக்கு ராஜமௌலி சார் அந்த காட்சியை வச்சிருப்பாரு. அது தான் எனக்கு ரொம்ம புடிச்சது அதோடு அழகாவும் இருக்கும்.

இந்த சிவகாமி கேரக்டர முன்னதாக ஸ்ரீதேவிக்கு கொடுக்க இருந்தாங்க இது ரம்யாவுக்கு தெரியுமா?  
எனக்கு அப்படி எதுவும் தெரியாது. இப்பதான் வேற ஒருத்தருக்கு சிவகாமி கேரக்டர கொடுக்க இருந்தத பத்தி கேள்விபடுறேன். எனக்கு இந்த கேரக்டர கொடுக்குறதுக்கு முன்ன யார்ட்ட எல்லாம் போய் அப்ரோச் பண்ணாங்கன்னு எனக்கு தெரியாது. அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்ல இப்போ. இந்த கேரக்டர்ல நடிக்கனும்னு எங்கிட்ட வரும் போது, நான்கூட அதிக ஆர்வம் காட்டல. ஏன்னா, இந்த படத்துல நடிக்குறதுக்கு அதிக காலம் கேட்டாங்க. அந்த சமயத்துல எனக்கு வேற சில ஒப்பந்தங்களும் இருந்துச்சு. அப்போ ஸ்கிரிப்ட்ட நல்ல படிச்சுட்டு சொல்ல சொன்னதும், டபுள் ஓகே சொல்லிட்டேன்.

ரம்யா அடுத்து என்ன எதிர்பாக்குறாங்க?
அந்த மாதிரி எதுவும் முன்கூட்டியே சொல்லவும் முடியாது எதிர்பாக்கவும் முடியாது. ஆனா சிவகாமி போல ஒரு கேரக்டர்ல நடிப்பேன்னு நா ஒருநாளும் எதிர்பாக்கல. ஆனா நான் இப்போ அதை செய்சு முடிச்சுருக்கேன். சப்போர்ட்டிங் கேரக்டர்க்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுத்துருக்காங்கன்னு சொல்லி முடிச்சாங்க சிவகாமியம்மா… அறிமுக இயக்குனராக இருந்தாகூட படத்துல நடிக்குறதுக்கு தயார்னு க்ரீன் சிக்னலும் காமிச்சுருக்காங்க ரம்யா கிருஷ்ணன்.

 

மொழி பெயர்ப்பு:  கணேஷ் ராஜ் செ

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Baahubali 2s sivagami ramya krishnan reveals the scene that made her cry

Next Story
பாகுபலி ஆச்சரியங்கள்! வடை போச்சே… ஹிரித்திக் முதல் நயன்தாரா வரை…!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com