Advertisment

கூட்டத்தினரின் வரவேற்பில் பிரபாஸ்: பாகுபலி முதல் நாள் படபிடிப்பு காட்சி!

பாகுபலி 2 உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ .1,500 கோடிக்கு மேல் சம்பாதித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
baahubali prabhas welcomed by crowd at shooting

baahubali prabhas welcomed by crowd at shooting

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, பாகுபலி பட தொடர் படப்பிடிப்பின் முதல் நாள் நேற்று. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் இரண்டு பகுதிகளைக் கொண்ட மகத்தான படம். இது இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய திரைப்படத் தொடர்களில் ஒன்றாக மாறியது. பாலிவுட் ரசிகர்களின் பார்வையை  தென்னிந்திய சினிமாவை நோக்கி நகர வைத்தது.

Advertisment

மது பிரியர்களுக்கு செம்ம நியூஸ் போங்க!.. 5 புதிய எலைட் டாஸ்மாக் திறக்க போறாங்க!

பாகுபலி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கைப்பிடியில், படபிடிப்பின் முதல் நாள் படங்களை பகிர்ந்து கொள்ளப்பட்டது. நடிகர் பிரபாஸை (பாகுபலி கதாபாத்திரத்தில் நடித்தவர்) பெரும் கூட்டத்தினரால் வரவேற்கப்பட்ட படமாக இருந்தது. "ஜூலை 6, 2013. இது அனைத்தும் தொடங்கிய தருணம்! நாங்கள் 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் பாகுபலியின் படப்பிடிப்பைத் தொடங்கினோம்" என பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பதிவின் மற்ற படங்களில், திரைப்பட இயக்குநர் ராஜமெளலி தனது குழுவினருக்கு அறிவுறுத்தல்களைக் கொடுப்பதாகத் தெரிகிறது.

பாகுபலி தொடரில், பாகுபலி: தி பிகினிங் மற்றும் பாகுபலி: தி கன்க்ளுஷன் ஆகியவை அடங்கும். இரண்டாம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கு பெரும்பாலும் முதல் திரைப்படத்தின் ட்விஸ்டுகள் தான் காரணம். பாகுபலி 2 உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ .1,500 கோடிக்கு மேல் சம்பாதித்தது.

1 3/4 வருடத்திற்கு ரீசார்ஜ் கவலை இல்லை… BSNL-ன் இந்தப் பிளானைப் பார்த்தீர்களா?

ஒரு கற்பனையான மகிழ்மதி ராஜ்ஜியத்தில் அமைக்கப்பட்ட பாகுபலி தொடர், அமரேந்திர பாஹுபலி (பிரபாஸ்) மற்றும் பல்லல்தேவா (ராணா தகுபதி) ஆகிய இரு சகோதரர்களின் கதையாகும். ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா பாட்டியா, சத்யராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Prabhas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment