scorecardresearch

Baakiyalakshmi: இதெல்லாம் தேவையா கோபி? ராதிகாவிடம் இருந்து தப்பிக்க குடும்பத்துடன் எஸ்கேப்!

இன்றைய எபிசோடைப் பார்க்கும் பார்வையாளர்கள், இதெல்லாம் தேவையா கோபி? தப்பா ஆசை பட்டா இப்படித்தான் குடும்பத்தோட எஸ்கேப் ஆக வேண்டியிருக்கும்… ஏகப்பட்ட பொய் சொல்ல வேண்டியிருக்கும் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று முனுமுனுக்கிறார்கள்.

Baakialakshmi serial today episode, vijay tv, Baakialakshmi serial, Baakialakshmi serial updates, விஜய் டிவி, பாக்கியலட்சுமி சீரியல், கோபி, ராதிகா, எழில், பாக்யா, குடும்பத்துடன் டூர், பாகியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடு, gopi tour with family for escap from radhika, baakiyalakshmi, baakya, ezhil, radhika, amirtha, jeniffer, tamil tv serials news, baakiyalakshmi serial news

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று நடைபெறுகிற நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா பொறுப்பான அன்பான குடும்பத் தலைவியாக இருக்கிறார். வளர்ந்த பிள்ளைகளின் தாயாக இருக்கும் பாக்யா குடும்பம்தான் உலகமாக இருக்கிறார். ஆனால், பாக்யாவின் கணவன் கோபி, தனது மனைவி பெரிய அளவில் படிக்காதவள் என்பதால் தனது முன்னாள் காதலி ராதிகா மீது ஆசைப் படுகிறார். பாக்யாவுக்கும் ராதிகாவுக்கும் நட்பு ஏற்படுகிறது. ராதிகா ஏற்கெனவே திருமணமாகி மயூ என்ற பெண் குழந்தையுடன் இருக்கிறாள். ராதிகா கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று ஒற்றை தாயாக வசித்து வருகிறாள். கோபி, தனது முன்னாள் காதலி ராதிகாவுடனான தொடர்பை மனைவி ராதிகாவுக்கு தெரியாமலும் தனது மனைவியைப் பற்றி முன்னாள் காதலில் ராதிகாவுக்கும் தெரியாமல் மறைத்து வருகிறார்.

இந்த சூழலில்தான், பாக்யா தனது வீடு அருகே ராதிகாவுக்கு வீடு பார்க்கிறாள். ஆனால், ராதிகா தனது வீட்டு அருகே குடி வந்துவிட்டால் தனது குட்டு அம்பலமாகிவிடும் என்று தடையை ஏற்படுத்துகிறான். ஆனாலும், ராதிகா, பாக்யா சொன்ன வீட்டை வாங்கிவிடுகிறாள்.

இதையடுத்து, ராதிகா தனது வீட்டு கிரஹப் பிரவேசத்திற்கு பாக்யாவின் குடும்பத்தினர அனைவரும் வர வேண்டும் என்று அழைக்கிறாள்.

பாக்யலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில், தனது குடுமத்தினர் ராதிகா வீட்டு கிரஹபிரேவசத்திற்கு செல்வதை தடுக்க கோபி அனைவரையும் சுற்றுலா என சொல்லி ஒரு வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே சென்ற குடும்பத்தினர், “இது யார் வீடு? திடீர்ன்னு எதுக்கு இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க” என அனைவரும் கேட்கிறார்கள். அதற்கு கோபி, “எனக்கு உங்க எல்லார் கூடயும் ஒன்னா இருக்கணும் தோணுச்சு. அதான் திடீர்ன்னு பிளான் பண்ணி கூட்டிட்டு வந்தேன்” என சொல்கிறார்.

கோபி கூறியதைக் கேட்ட பாக்யா, “ஏன் அதுக்கு உங்களுக்கு வேற நாளே கிடைக்கலையா? இன்னைக்கு ராதிகா வீட்டு பங்க்ஷன். நம்ம குடும்பத்தோட வர்றோம்ன்னு சொல்லி இருக்கோம். நமக்காக அவங்க காத்துகிட்டு இருப்பாங்க. இப்படி திடீர்ன்னு கூட்டிட்டு வந்துட்டீங்களே” என்று கேட்கிறாள்.

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கும் கொபி, “ஆஃபிஸ்ல நெறைய பிரச்சனை. மனசே சரியில்லை. அதான் உங்ககூட இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சு. அதனாலதான் திடீர்னு உங்க எல்லாரையும் இங்க கூட்டிட்டு வந்தேன்” என்று ஒரு பொய்யை சொல்கிறார்.

அப்பா கோபியின் பேச்சை நம்ப மறுக்கும் எழில், ட்டும் சந்தேகமாக பார்கிறான். எழிலின் சந்தேகப் பார்வையைப் புரிந்துகொண்ட கோபி, “நீ வேணா ஆபிஸ்ல போன் போட்டு கேட்டு பாருடா… எல்லா வேலையையும் ஒத்தி வைச்சுட்டு தான் இங்க வந்தேன்” என கூறி சமாளிக்கிறான்.

இதையடுத்து, பாக்யா, ராதிகாவுக்கு போன் பண்ணி நடந்தவற்றை கூறி மன்னிப்பு கேட்கிறாள். இதைக் கேட்ட ராதிகா “நீங்க இதையெல்லாம் நினைச்சு வருத்தப்படாதிங்க. நான் இன்னும் பால் காய்ச்சவே இல்லை, இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என்று ராதிகாவிடம் சொல்கிறாள்.

தனக்கா பால் காய்ச்சும் நாளையே ஒத்திவைப்பதாக ராதிகா கூறியதைக் கேட்டு பாக்யா வருத்தப்படுகிறாள். தொடர்ந்து பேசும் ராதிகா, “நான் வர்ற வெள்ளிக்கிழமை பிக்ஸ் பண்றேன். நீங்க வந்துடுங்க…” என்று கூறுகிறாள்.

பாக்யா, தனது கணவன் கோபியிடம் ராதிகா பால் காய்ச்சாத விஷயம் பற்றி கூறுகிறாள். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் கோபி அதிர்ச்சி அடைகிறான். “ராதிகா வெள்ளிக்கிழமை பால் காய்ச்சுவதால் வெள்ளிக்கிழமைகுள் போய்விடுவோம்ங்க… இன்னொரு தடவை அவங்கள ஏமாத்த முடியாது” என பாக்யா கோபியிடம் சொல்கிறாள்.

பாக்யா சொன்னதைக் கேட்ட கோபி, “அவகிட்ட இருந்து தப்பிக்க இங்க வந்தா, இப்போ மறுபடியும் புது பிரச்சனையா? ஒவ்வொரு தடவையும் மொத்த குடும்பத்தையும் செலவு பண்ணி கூட்டிகிட்டு சுத்த முடியுமா என்ன செய்வது” என்று மனதுக்குள் புலம்புகிறான். இன்றைய எபிசோடைப் பார்க்கும் பார்வையாளர்கள் இதெல்லாம் தேவையா கோபி? தப்பா ஆசை பட்டா இப்படித்தான் குடும்பத்தோட எஸ்கேப் ஆக வேண்டியிருக்கும்… ஏகப்பட்ட பொய் சொல்ல வேண்டியிருக்கும் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று ரசிகர்கள் முனுமுனுக்க வைக்கிறது. இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Baakialakshmi serial today episode gopi tour with family for escape from radhika