Advertisment

Baakiyalakshmi Serial: பாக்யா எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு பெருசா ஆப்பு வச்சுடுறா… புலம்பும் கோபி!

பாக்கியா போன பிறகு, எல்லாத்துக்கும் ஆம்னு தலையாட்டிட்டு போகும்போது பெருசா ஒரு ஆப்பு வச்சுட்டு போயிடுறா, ‘ராதிகா! ராதிகா! ராதிகா! நல்ல விவரண்டா… நான்தான் கூமுட்டை” என்று கோபி தனியாக புலம்புகிறான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
baakiyalakshmi serial, vijay tv serial, baakiyalakshmi, baakiyalakshmi today episode, gopi asks at bakyalakshmi to stop speaking with radhika, பாக்கியலட்சுமி சீர்யல், பாக்யா, கோபி, செழியன், எழில், அமிர்தா, ஜெனிஃபர், சீரியல் நியூஸ், Chezhiyan, Ezhil, Amirtha, Jeniffer, baakiyalakshmi story, tamil tv serial news

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கும் கதையை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில், பாக்யா வீட்டுக்கு அருகே வீடு வாங்குவதற்கு ராதிகா அட்வான்ஸ் கொடுத்திருந்த நிலையில், கோபி சொன்னதைக் கேட்டு ராதிகா அந்த வீடு வேண்டாம் என்று கூறுகிறாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் பாக்யா, அட்வான்ஸ் பணத்தை கொடுத்தாச்சு சுந்தரி அக்காவிடம் திரும்ப எப்படி கேட்பது என்று கவலைப்படுகிறாள். வீட்டு ஹாலில், பாக்யா, கோபி, தாத்தா, பாட்டி என 4 பேரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது, பாக்யா, “அந்த வீடு வேண்டாம்னு ராதிகா சொல்றாங்க மாமா” என்று மாமனாரிடம் கூறுகிறாள்.

இதற்கு கோபி, “நெனச்சேன் இப்படியெல்லாம் நடக்கும்னு, நான் அன்னைக்கே சொன்னேன். இதெல்லாம் உனக்கு தேவையா பாக்யா” என்று கேட்கிறான்.

publive-image

பாட்டியும், “கோபி அன்னைக்கே சொன்னான் இப்படி எல்லாம் நடக்கும்னு” என்று கூறுகிறார்.

இதையடுத்து, கோபி, “நா சொன்னா எங்கம்மா இவ கேட்கிறா, சும்மாவே இருப்பதில்லை தேடித்தேடி ஏதாவது புது பிரச்சனையே தலையில தூக்கி போட்டுகிட்டு இருக்கா… நான் உன் மேல எவ்வளவு அக்கறை வச்சிருக்கேன். உனக்கு புரியுது இல்லையா, அதான் இவ்வளவு சொல்றேன். இதுக்கு அப்புறம் உன் இஷ்டம்” என்று சொல்கிறான்.

பாட்டி, “சுந்தரி ஏற்கனவே கழுத்து வரைக்கும் நாக்கு வச்சுட்டு பேசுவா, இப்ப போய் வீடு வேணாம்னு சொல்ல முடியுமா” என்று கூறுகிறார். அதற்கு தாத்தா, “விடு பாத்துக்கலாம்” என்று சொல்கிறார்.

இதையடுத்டு, பாக்யா எப்படி மாமா அந்த அக்காகிட்ட பணத்தை வாங்குவது என்று கேட்கிறாள். அதற்கு தாத்தா “முதல்ல அந்த பொண்ணு எல்லாத்தையும் விசாரிச்சு பாத்துட்டு அட்வான்ஸ் கொடுத்து இருக்கலாம்” என்று கூறுகிறார். இடையில் பாட்டி, முதல்ல இவளை கோபி சொல்றத கேக்க சொல்லுங்க என்று கூறுகிறார்.

தாத்தா, “சரி விடு, ஏம்மா நீ முதல்ல அந்த சுந்தரிகிட்ட பேசு பாத்துக்கலாம்” என்று தைரியம் கூறுகிறார்.

publive-image

அடுத்த காட்சி பெட்ரூமில், கோபி போனில் எதையோ பார்த்துக்கொண்டிருக்கிறான். அப்போது, பாக்யா கதவை திறந்து கொண்டு உள்ளே வருகிறாள். கோபி, பாக்யாவிடம், வா, இங்கே உட்காரு.. என்ன ஆச்சு என்று விசாரிக்கிறான். “ஏன் ஒரு மாதிரி இருக்குற… உன் ப்ரண்டு உன்னை ஏமாத்திட்டாங்களா, வருத்தமா இருக்கா” என்று கேட்கிறான்.

அதற்கு பாக்யா “சே! சே! ஏமாத்திட்டாங்கனு நினைக்கல இப்ப சுந்தரி அக்கா கிட்ட என்ன சொல்றதுனு எனக்கு தெரியலங்க” என்று கூறுகிறான். அதற்கு கோபி, யார் சுந்தரி அக்கா என்று கேட்கிறான். அதற்கு பாக்யா இங்க பார்க் இருக்கு இல்ல, பக்கத்துல ஒரு ரோஸ் பெயிண்ட் அடிச்ச வீடு இருக்கு இல்ல, அதுதான் சுந்தரி அக்கா வீடு என்று சொல்கிறாள்.

publive-image

கோபி அவங்க இங்க ஏன் வந்தாங்க என்று எல்லா வில்லத்தனத்தையும் செய்துவிட்டு எதுவே தெரியாததுபோல கேட்கிறான். அதற்கு பாக்யா, “வீடு பார்த்தது… அது அவங்களோட வீடுதான்… அந்த அக்கா ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. உங்ககிட்ட கொடுத்த அட்வான்ஸ ராதிகா திரும்ப கேட்கிறார்கள் என்று சுந்தரி அக்கா கிட்ட திரும்ப அட்வான்ஸ் கேட்கிறதை நினைச்சாலே பயமா இருக்குங்க” என்று கூறுகிறாள்.

அதற்கு கோபி, “பாக்யா நான் எதை சொன்னாலும் நீ கேட்க மாட்டேங்கிற” என்று கூறுகிறான். அதற்கு பாக்யா, “ஏங்க, எல்லாமே நீங்க சொல்றததான் கேட்கிறேன்” என்று கூறுகிறாள். அதற்கு கோபி, “அதெல்லாம் இல்ல, நான் ராதிகா விஷயத்துல ஆரம்பத்திலிருந்தே சொல்லிகிட்டு இருக்கேன் நீ கேட்டியா,” என்று கேட்க, பாக்யா, “அது மட்டும் தான் நான் கேட்கல” என்று பதில் சொல்கிறாள்.

கோபி, “முதல்ல இருந்து நீ அந்த விஷயத்திலதான், என் சொல் பேச்சைக் கேட்கவே இல்லை. நீ வீடு பாக்க ஆரம்பிச்ச உடனே, நான் என்ன சொன்னேன், ரிஜிஸ்ட்ரேஷன் அது இதுன்னு பிரச்னை இருக்கும்னு சொன்னேன். நீ கேட்டியா, இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கிற” என்று கூறுகிறான்.

publive-image

தொடர்ந்து பேசும் கோபி, “பாக்யா, விடு மனச போட்டு ரொம்ப குழப்பிக்காத, எப்படியாவது அவங்ககிட்ட பேசி பணத்தை வாங்கி ரிட்டன் பண்ணிடு… அதனால, இனிமேல் நீ இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் முக்க நுழைச்சி மாட்டிக்காத” என்று கூறுகிறான். அதற்கு பாக்யா, “இனிமேல், நான் சத்தியமா செய்ய மாட்டேங்க” என்று கூறுகிறான்.

கோபி, “யாரு எப்படியோ போறாங்க பாக்யா… உனக்கு எதுக்கு இதெல்லாம், நீ ஏன் இளகின மனசோட எல்லாருக்கும் உதவி பண்ணணும்னு நினைக்கிற, அன்னைக்கி கூட ஒரு சின்ன பொண்ணு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்த, அந்த மாதிரி சுச்சுவேஷன் ஏதாவது ஒரு சின்ன ப்ராப்ளம் வந்தா என்ன பன்றது, அந்த ராதிகாவுக்கு வீடு எல்லாம் பார்க்காத, இப்ப எவ்வளவு பெரிய பிரச்னை ஆயிருக்கு, அந்த ராதிகா கூட எல்லாம் பேசாத, நான் சொல்றதை கேளு, அதனால இனிமேல் அதேபோல எல்லாம் பண்ணாத ஓகே” என்று பாக்யாவிடம் கேட்கிறான். அதற்கு பாக்யாவும், “சரிங்க இனிமே அதெல்லாம் பண்ண மாட்டேன்” என்று கூறுகிறாள்.

“இனிமேல் அந்த பொண்ண நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது, மீட் பண்றது, இதெல்லாம் வேண்டாம் பாக்யா… இப்போது இந்த வீடு வேண்டாம்னு சொல்லிட்டாங்க, அடுத்தது இன்னொரு வீடு வேண்டும் என்று சொல்வாங்க… திரும்பவும் போய் அவங்களுக்கு வீடு பார்த்து கொடுப்பயா?” என்று கேட்கிறான். அதற்கு பாக்யா, “நா மாட்டேன்பா, ஏன்னா, எனக்கு வேற எந்த வீடு எதுவும் தெரியாது” என்று கூறுகிறாள்.

publive-image

இதைக் கேட்டு கடுப்பாகும் கோபி, “தெரிஞ்சாலும் செய்யக்கூடாது” என்று சொல்கிறான். “சரி நீ இதை எல்லாம் தேவை இல்லாம ‘வொர்ரி’ பண்ணிக்காத, எப்படியாவது திரும்ப பணத்தை வாங்கி கொடுத்துடலாம். சரி இனிமேல் அவங்க கிட்ட எல்லாம் பேச வேண்டாம்” என்று கூறுகிறான்.

கோபி சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்ட பாக்யா, “வீடு எல்லாம் பார்த்து கொடுக்க மாட்டேங்க… ஆனால், இனிமேல் ராதிகா கிட்ட பேசுவேங்க…” என்று கூறிவிட்டு வெளியே செல்கிறாள்.

இதைக் கேட்டு கடுப்பான கோபி, பாக்கியா போன பிறகு, எல்லாத்துக்கும் ஆம்னு தலையாட்டிட்டு தலையாட்டிட்டு போகும்போது பெருசா ஒரு ஆப்பு வச்சுட்டு போயிடுறா, ‘ராதிகா! ராதிகா! ராதிகா! நல்ல விவரண்டா… நான்தான் கூமுட்டை” என்று ராதிகா கூறியதை நினைத்து தனியாக புலம்புகிறான்.

publive-image

அடுத்த காட்சியில், செழியன் பெட்ரூமில், லேப்டாப்பில் வீடுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அப்போது, உள்ளே வரும் அவனுடைய மனைவி ஜெனிஃபர், என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்று கேட்கிறாள். அதற்கு, செழியன் ஒரு வீடு வாங்க திட்டமிட்டிருப்பதாகவும், எந்த வீடு பிடிச்சிருக்கு என்று ஜெனிஃபரிடம் லேப்டாப்பில் வீடுகளின் போட்டோக்களை காட்டுகிறான். ஜெனிஃபர் தனக்கு பிடித்த வீடுகளை சொல்கிறாள். அப்போது, வீட்டில் 2 பெட்ரூம் இருப்பதைக் கூறுகிறான். இதைக் கேட்ட ஜெனிஃபர், வீட்டில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு எல்லாம் பெட்ரூம் இல்லையா என்று கேட்கிறாள். அதற்கு கோபி, நாம ரெண்டு பேர் இருக்கிறதுக்குதான் வீடு வீட்டில் எல்லோருக்கும் ஒரு பெட்ரூம் இருக்கிற மாதிரி வீடு வாங்க என்னால முடியாது. வீடு வாங்கிவிட்டு நாம் ரெண்டு பேர் மட்டும் அங்கே போகலாம் என்று சொல்கிறான். இதற்கு ஜெனிஃபர், நான் வரமாடேன், எங்க அம்மா, அப்பா வேளைக்கு போயிட்டா வீட்ல நான் தனியாதான் இருப்பேன். நீயும் வேளைக்கு போயிட்டா என்னால தனியா இருக்க முடியாது. அதனால், நான் வரமாட்டேன் என்று சொல்கிறாள்.

publive-image

இதைக்கேட்டு கடுப்பாகும் செழியன் “நான் எவ்வளவு ஆசையாக வீடு வாங்கலாம்னு சொல்கிறேன், வேண்டாம்னு சொல்ற, இதுதான் உங்கிட்ட எனக்கு புடிக்காதது என்று கூறுகிறான். இதற்கு ஜெனிஃபர் நீ ஏன் உங்க அப்பா மாதிரி இருக்க என்று கேட்க, செழியன், எங்க அப்பா சொல்வது தான் சரி, நீ எங்க அம்மா மாதிரி இருக்க… இதே வேற பொண்ணுங்கனா வீடு எங்க இருக்க என்ன விலை என்று கேட்டிருப்பாங்க… ஆனால், நீ ஆரம்பத்திலயே வேண்டாம்னு சொல்ற” என்று கோபமாக பேசுகிறான். அதற்கு ஜெனிஃபரும் நான் உங்க அம்மா மாதிரிதான் என்று சொல்கிறாள்.

செழியன் கூறியதை புரிந்துகொண்ட ஜெனிஃபர், பிறகு சாரி கேட்கிறாள், இதையடுத்து, வீடு காட்டு நான் பார்க்கிறேன் என்று கேட்கிறாள். ஆனால், செழியன் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் தூங்கு என்று கோபமாக சொல்கிறான். அதன் பிறகு, ஜெனிஃபர் மீண்டும் சாரி கேட்கிறாள். இதையடுத்து, காலையில் தான் போட்டோ காட்டுவேன். அப்ப எப்படி இருக்கனும்னு சொல்லு என்று கூறுகிறான்.

publive-image

அடுத்த காட்சியில், தாத்தா, நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார். பக்கத்தில் பாட்டி இருக்கிறார். அப்போது தேங்காய் துருவிக்கொண்டிருக்கும் வேலைக்காரி செல்வி, “ஏன் ஐயா, பேப்பர் படிக்கிறதுதான் படிக்கிறீங்க சத்தமா படிங்க நான் கேட்டுக்கறேன்” என்று கூறுகிறாள். இதைக் கேட்டு கோபமடையும் பாட்டி, அவர் என்ன ஆல் இந்திய ரேடியோவா உனக்கு சத்தமா பேப்பர் படிச்சி காட்டறதுக்கு என்று கேட்கிறார். அதற்கு செல்வி, “ஏம்மா, எப்ப பாரு ஐயா கூட சண்டை போட்டுக்கினு இருக்கீங்க… ஆனால், ஐயாவ ஏதாவது சொல்லிட்ட உடனே ரோஷத்துக்கு வந்துடுறீங்க…” என்று சொல்கிறாள். இதைக்கேட்டு தாத்தா சிரிக்கிறார்.

“சரி அய்யா படிச்சு காட்ட வேணாம்… நீங்க படிச்சு காட்டுங்க” என்று செல்வி கேட்க கடுப்பான பாட்டி, “வர வர உனக்கு வாய் நீளுது…” என்று திட்டுகிறார்.

இதையடுத்து, தாத்தா, “இப்ப என்ன வேணும் உனக்கு… பேப்பர் படிச்சு காட்டனும் அவ்வளவுதான… உனக்கு என்ன வேணும்” என்று கேட்கிறார். செல்வியும் தங்கம் விலை எவ்வளவுனு பாருங்க என்று கேட்கிறாள். தாத்தா நேற்றைவிட இன்னைக்கு தங்கம் விலை கூடியிருக்கு என்று கூறுகிறார்.

publive-image

அதற்கு செல்வி, “தங்கம் விலை குறைஞ்சா நான் என்ன வாங்கவா போறேன்” என்று கேட்கிறாள். பாட்டியும் இவளுக்கு கிண்டலைப் பார்த்தீங்களா என்று கூறுகிறார். செல்வி தான் 10 வருஷமா ஒரு ஜிமிக்கி ஒரு நெக்லஸ்வாங்கலாம்னு இருந்தேன் எங்க நடக்குது என்று ஆயாசப்படுகிறாள்.

அப்போது, பாக்யா சரிசரி வேலையைப் பாரு என்று சொல்கிறாள். அப்போது, ராதிகா வீட்டுக்கு அட்வான்ஸ் வாங்கிய சுந்தரி அக்கா, வந்து எப்போது மீதி பணத்தை தரப்போறாங்கனு எங்க வீட்டுக்காரர் கேட்கச் சொன்னாங்கனு கேட்கிறார்கள். அப்போது பாட்டி, ஏன் பாக்யா நீ இன்னும் சொல்லலையா என்று கேட்க பாக்யா இன்னும் இல்லை அத்தை. என்று மெல்ல தயங்கித் தயங்கி, ராதிகா அட்வான்ஸை திரும்ப கேட்பதைப் பற்றி கூறுகிறாள். இதைக்கேட்டு கோபமடையும் சுந்தரி, “அவங்க வீடு புடிச்ச பிறகுதான அட்வான்ஸ் கொடுத்தாங்க இப்போ ஏன் வேண்டாம்னு சொல்றாங்க” என்று கேட்கிறார்கள்.

சுந்தரி என்ன காரணம் என்று கேட்க, தாத்தாவும் பாட்டியும், “அந்த பொண்ணு வக்கில் கிட்ட விசாரிச்சதுல உங்கள் வீட்டு டாக்கு மெண்டில் ஏதோ குறை இருக்குனு சொல்றாங்களாம். அதனால்தான் வேண்டாம்னு சொல்லியிருக்கு” என்று கூறுகிறார்கல். இதைக் கேட்ட சுந்தரி அக்கா, “ஏதாவது பிரச்னைனா என்கிட்ட கேட்க வேண்டியதுதான?” என்று கேட்கிறார். அது எங்க பூர்வீக சொத்து அதுலதான் வீடு கட்டியிருக்கிறோம். நீங்க என்னங்கய்யா புதுசா ஒரு விஷயம் சொல்றீங்க… என்று சுந்தரி கேட்க எல்லோரும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள்.

அதற்கு பாட்டி, “என்னமோ தெரியல, அந்த பொன்னு வேணாம்னு சொல்லுது… அட்வான்ஸை திருப்பி கொடுத்திடுமானு” கூறுகிறார்.

இதைக்கேட்ட சுந்தரி அக்கா, “இதெல்லாம் சரியில்லை பாக்யா, நீங்க பேசறதெல்லாம் சரியில்ல.” என்று கூறுகிறார். இதற்கு பாக்யா நான் என்னக்கா பண்றது அவங்க வேணாம்னு சொல்றது.

சுந்தரியாக உறத்த குரலில், “இதுக்குதான் தெரிஞ்சவங்கள நம்பி எந்த விஷயத்துக்கும் போகக்கூடாது. நானா வந்து வீடு விக்கிறன்னு சொன்னன் உங்க கிட்ட. பத்திரம் சரியில்ல அது சரியில்லனு சொல்லிகிட்டு இருக்கீங்க… என்ன பத்திர சரியில்ல. அது சரியில்லனு சொல்றது” என்று கேட்கிறாள். பாட்டி அந்த பொண்ணு புடிக்கலனு சொல்லுது பணத்தை திரும்ப கேட்குது என்று கூறுகிறார். அதற்கு சுந்தரி அக்கா, “என்ன நீங்க பணத்தை திரும்ப கேட்கிறீங்க… பணத்தை அப்படியேவா வச்சிருக்க முடியும். வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கிற காண்ட்ராக்டுக்கு கொடுத்தாச்சு. பணத்தை திரும்ப கேட்ட நான் எங்க போவேன்” நான் வர்றேன் என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாள்.

publive-image

இதையடுத்து பாட்டி, “இதுக்குதான் கோபி அப்பவே சொன்னான். இந்த மாதிரி விஷயத்துல நீ தலையிடாதனு… பாக்யா உனக்கு தேவையா?” என்று பாக்யாவை கடிந்துகொள்கிறார்.

செல்வி, “ஏங்கா அந்த அக்கா பணம் தருமா? தராதா?” என்று கேட்கிறாள்.

அதற்கு, பாக்யா, “ராதிகா வேற பணத்தை வாங்கி கொடுக்க சொல்லிட்டாங்க… இந்த அக்கா வேற ஒன்னுமே சொல்லாம போறாங்க பணத்தை தருவாங்களா மாட்டாங்களானு தெரியலயே… என்ன பண்றது எனக்கு பயமா இருக்கு” என்று கவலைப்படுகிறாள். அதற்கு தாத்தா, விடுமா பேசி வாங்கிக்கலாம். நான் அந்தம்மா வீட்டுக்காரர் கிட்ட பேசுறேன். என்ன 10 ஆயிரம் 20 ஆயிரம் கம்மி பண்ணி கொடுப்பாங்க…” என்று கூறுகிறார்.

publive-image

இதைக் கேட்டு பாட்டி, கோபி சொல்றதுதான் சரி… உனக்கு தேவையா இதெல்லாம்… 10 ஆயிரம் 20 ஆயிரம் குறைஞ்சா நீயா கையில இருந்து போட்டு தருவ… அய்யயோ இவ தர்வாளோ தரமாட்டாளோ தெரியலியா பாட்டியும் அதன் பங்குக்கு பாக்யாவுக்கு பயத்தை கூட்டிவிடுகிறது.

அடுத்த காட்சியில், எழில் அமிர்தாவை சந்திக்கிறான். அப்போது அமிர்தா இங்க என்ன விஷயமா வந்தீங்க… என்று கேட்கிறாள். அதற்கு எழில் உங்களைத்தான் பார்க்க வந்தேன் என்று கூறுகிறான். அதற்கு அமிர்தா “ஓ…!” அப்படியா என்று கேட்கிறாள்.

publive-image

இதற்கு எழில் எபிசிடினு எழுத்து இருக்கு அதென்ன ஓ மட்டும் அடிக்கடி சொல்கிறீர்கள் என்று நகைச்சுவையாக பேசுகிறான். அமிர்தா சிரிக்கிறாள். எழிலும் சிரிகிறன். அப்போது எழில் தனது பையில் இருந்து சாக்லேட் எடுத்து தருகிறான். எதற்கு என்று அமிர்தா கேட்கிறாள். நீங்க இனிமேல் என்கூட ஃபிரெண்டா இருக்கப் போறேன்னு சொன்னீங்க இல்ல… அதான். என்று கூறுகிறான். அமிர்தாவு, நேத்து நான் உங்களைப் பார்த்தது எங்க வீட்ல தெரிஞ்சு போச்சு…நானும் எங்க வீட்ல இதைப் பற்றி பேசாதீங்க… அவரு என் ஃபிரெண்ட்னு சொல்லிட்டேன் என்று கூறுகிறாள். இதைக் கேட்ட எழில், பாருங்க… சூப்பருங்க… அதுக்குதான் இந்த சாக்லேட்… என்று கூறி சிரிக்கிறான். அமிர்தாவும், எழிலைப் பார்த்து அழகாக சிரிக்கிறாள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Baakiyalakshmi Serial Baakiyalakshmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment