ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் வீர்ருடன் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை இனியா காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சீரியலில் பாக்யாவின் மகள் இனியா கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை நேஹா. ராதிகாவுடன் சித்தி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் பள்ளி செல்லும் பெண்ணாக நடிக்க தொடங்கிய இவர், தற்போது கல்லூரி பெண்ணாக மாறியுள்ள நிலையில், அவரின் ரியல் லைஃபிலும் இந்த மாற்றம் நடந்துள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் மதிஷா பதிரானாவுடன் நடிகை நேஹா காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
கடந்த வருடமே வெளியான இந்த தகவல் குறித்து விளக்கம் அளித்திருந்த நடிகை நேஹா, ஒரு பேட்டியில், எனக்கு கிரிக்கெட் பார்க்கவே தெரியாது. யாராவது கமெண்டரி கொடுத்து சொல்லி கொடுத்தால் பார்ப்பேன். ஒருமுறை செட்டில் கிரிக்கெட் பார்த்தபோது, அருகில் இருந்த ஒருவர் பத்திராணா குறித்து சொன்னார். அவர் இன்ஸ்டா ஸ்டோரி போட்டதை நான் ஷேர் செய்தேன். அதன்பிறகு தான் நான் பத்திராணாவை காதலிப்பதாக தகவல் வெளியானது.
இந்த கிசு கிசு எனக்கு ஜாலியாக இருந்ததால் விட்டுவிட்டேன். உண்மையில் நான் பத்திராணாவை பார்த்தது கூட கிடையாது. அதே சமயம் நிஜ வாழ்க்கையில் நான் காதல் தோல்வியை சந்தித்தபோது, கண்ணீர்விட்டு கதறி அழுதேன். காதல் தோல்விக்கான காரணத்தை சொன்னால் அம்மா பார்த்துவிட்டு அடிப்பார் என்று சமீபத்தில் எஸ்.எஸ்.மியூசிக் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“