தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது.
தற்போது கோபி தனது குடும்பத்தில் இருந்து பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், பாக்யா தனி ஆளாக குடும்பத்தை கவனிக்க தொடங்கிவிட்டார். இதனால் சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனது குடும்பத்தின் மத்தியில் சந்தோஷமான வாழ வேண்டும் என்று ராதிகாவை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு பக்கத்திலேயே குடி வந்த கோபி, தற்போது சந்திக்கும் சிக்கல்கள் பரபரப்பின் உச்சமாக இருக்கிறது.
நாள் தோறும் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில் தற்போது இனியா பள்ளியில் போன் யூஸ் பண்ணி மாட்டிக்கொண்டார். இதனால் அடுத்த பிரச்சனை தொடங்கியுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே பாக்யா கேரக்டரில் நடித்து வரும் சுஜித்ரா மற்றும் அமிர்தா கேரக்டரில் நடித்து வரும் ரித்திகா தமிழ் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் வெளியாகும் படங்களின் பாடல்கள் அவரது ரசிகர்கள் மட்டுமல்லமல் சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி தங்களது சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் பிரபலங்கள் பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையல் சமீபத்தில் வெளியாக வாரிசு படத்தின் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த பாடலுக்கு நடிகை சுஜித்ரா மற்றும் ரித்திகா தமிழ்ச்செல்வி இருவரும் டான்ஸ் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இப்படியெல்லாம் டான்ஸ் ஆடுவாங்கனு நெனச்சிகூட பாக்கல என்று ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“