Advertisment

ஈஸ்வரி மகனுக்கு கெட்டிமேளம்... ஒன்றாக இணைந்த பாக்கியலட்சுமி டீம் : வைரல் போட்டோஸ்

சுஜாதா என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் 50-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு வெளியான இருவர் உள்ளம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Baakiyalskhmi

பாக்கியலட்சுமி சீரியல் டீம்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகை ராஜலட்சுமியின் மகன் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரையின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் அம்மா ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் ராஜலட்சுமி. கதையின் முக்கிய கேரக்டரான ஈஸ்வரி ராதிகாவை செய்யும் டார்சர் வேற ரகமாக உள்ளது. பாட்டியின் நடிப்பு சூப்பர் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சங்கராபரணம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று அசத்தினார். சுஜாதா என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் 50-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு வெளியான இருவர் உள்ளம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

கடந்த 1990-ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் என்பரை திருமணம் செய்துகொண்ட ராஜலட்சுமிக்கு ரோகித் ராகுல் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் ரோகித்தின் திருமணம் சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

இது தொடர்பான புகைப்படங்களை நடிகை கம்பம் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment