baakiyalakshmi ezhil baakiyalakshmi serial : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கிய லட்சுமி’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏராளம். ஒரு பெண்ணுக்கு, அம்மாவாக, மனைவியாக, மருமகளாக இருக்கும் சவால்களை மையப்படுத்திய கதை.
பாக்கிய லட்சுமியின் மகன் செழியன் பல பிரச்சனைகளுக்கு பிறகு ஜெனியை கரம் பிடித்துள்ளார். இந்த கல்யாணம் நடக்க காரணமே செழியனின் அம்மா தான். ஆனால் செழியனோ தனது வேலையை முடித்துக் கொண்டு வழக்கம் போல் வீட்டில் பாக்கியாவுக்கு எதிராகவே தனது அப்பா, தாத்தா உடன் சேர்ந்து கேலி செய்து வருகிறார்.
ஆனால், அவரிமன் மனைவி ஜெனி அப்படியில்லை. படித்த பண்பான பெண். தனது மாமியாருக்கு பல உதவிகளை செய்து மசாலா பொடி பிசினஸில் உதவியாக இருக்கிறார். ஜெனியுடன் சேர்ந்து பாக்கியா மசாலா பொடியை லாபமாக விற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
பாக்கியாவின் செல்ல மகன் எழில் ஒருவழியா ஷார்ட் பிலிம் பணிகளை முடித்து விட்டார். தனது வீட்டில் வேலை செய்யும் செல்வி அக்காவுக்கு அம்மா ரோல் கொடுத்து இருக்கிறார். ஆனால் செல்வி அக்கா எழிலையே டென்சன் செய்கிறார்.
Types of Good Morning ????
பாக்கியலட்சுமி – இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/6Os74jI5EI
— Vijay Television (@vijaytelevision) January 27, 2021
இவங்க நடிச்சு கொடுத்து, அதை எழில் சப்மிட்டு பண்ணி, ஆனால் அதுக்குள்ள தான் இன்னொரு பிரச்சனி இருக்கே. ஹீரோயினா நடிச்சவங்க தான் வேற ட்விஸ்டு தர போறாங்களே.