Pandian Stores Baakiyalakshmi Serial Magasangamam : அம்மா மட்டும் இருந்திருந்தா இந்த நிலைமை வந்து இருக்காது என தனது திருமணம் குறித்து யோசித்து கொண்டிருக்கிறாள் ஐஸ்வர்யா. அப்போது அவள் ரூமிற்கு வரும் பிரசாந்த், அவளுக்காக வாங்குன நகையை கிப்ட்டாக கொடுக்கிறான். அவள் வேணாம் என சொல்ல, உடனடியாக அங்கு வரும் கஸ்தூரி, கஸ்தூரி நகையை வாங்கி அவள் கையில் திணிக்கிறாள்.
இதை பார்த்துக்கொண்டிருக்கும் ஜெனி, கஸ்தூரியிடம் இதுபற்றி கேட்க அவள் ஏதேதோ சொல்லி சமாளித்து இறுதியாக ஐஸ்வாயாவுக்கு அப்பா அம்மா ஞாபகம் வந்துவிட்டதாக சொல்லிவிட்டு சொல்கிறாள். இதன் பின்னர் கோபியிடம் ஊருக்கு போவது குறித்து பேசும், ஈஸ்வரி, நம்ம வீடலா இருக்கும் போது வேலை வேலைன்னு சொல்லுவ, இங்க வந்து போன் கூட பேச மாட்ற என கேட்கிறாள்.
அதற்கு கோபி உங்களை எல்லாம் விட்டு ரொம்ப தூரம் விலகி போன மாதிரி இருந்துச்சு. அதான் உங்களுக்காக நேரம் ஒதுக்கியிருக்கேன் அது மட்டும் இல்லாம பிரசாந்தும் மல்லியும், நான்தான் இருந்து நிச்சயத்தை நடத்தனும்னு ரொம்ப ஆசப்பட்டாங்க. நம்ம எல்லாரும் இருந்து நல்லபடியா இந்த நிச்சயத்தை நடத்தி கொடுத்துட்டு போவோம் என கோபி சொல்கிறான். ஆனால் இதையெல்லாம்ம் நம்பாத எழில் கோபியை சந்தேக கண்ணுடன் பார்க்கிறான்.
இதற்கிடையே தாய்மாமன் இடத்துல இருந்து பிரசாந்த்துக்கு செயின், பொண்ணுக்கு மோதிரம் வாங்கி கொடுக்கணும் என என பாக்யா சொல்ல, அதாச்சியடையும் கோபி, அதெல்லாம் கல்யாணத்துக்கு பெருசா பண்ணுவோம் என சமாளிக்கிறான். இதற்கிடையில் முல்லை, தனம் கஸ்தூரி மூவரும் பேசி சிரித்துக்கொண்டிருக்கும்போது கண்ணன் ஏன் அமைதியாக இருக்கிறான் என்று கேட்கின்றனர்.
அப்போது கஸ்தூரி வெளிய எழில், பிரசாந்த் எல்லாம் இருக்காங்க. அவுங்க கூட எல்லாம் போய் பேச மாட்டீயா என கண்ணனிடம் கேட்கிறாள். அப்போது அங்கு வரும் பிரசாந்த்தும் அவனை கிண்டல் செய்ய, கண்ணன் கோபமாக எழுந்து போகிறான், இதற்கிடையில் ஐஸ்வர்யாவை மெஹந்தி வைக்க அழைக்கிறாள் இனியா. அப்போது அவ்வளிடம் எனக்கு இங்க நடக்குற எதுவுமே பிடிக்கலை. ஆனா என்கிட்ட நகை வாங்கும் போது சொல்றாங்க, உனக்கு கல்யாணம்ன்னு என கோபமாக சொல்கிறாள்.
அதன்பின்னர் கண்ணனிடம் வந்து பேசும் ஐஸ்வர்யா, நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன் என்கிட்ட பேசவே மாட்ற? எனக்கும் பிரசாந்த்துக்கும் நிச்சயம் என சொல்கிறாள். அப்போது கண்ணன், ஆமால உனக்கு நிச்சயமல நான் மறந்துட்டேன். உனக்கு பிரசாந்த் தான் நல்ல சாய்ஸ். சொல்லு ஐசு உனக்கு நான் என்ன கிப்ட் வாங்கி தரட்டும் என கேட்கிறான். ஆனால் அவள் கோபமாக சென்று விடுகிறாள். அதன்பிறகு தனியாக நின்றுகொண்டு எனக்கு தான் கண்ணனை பிடிச்சு இருக்கு போல. அவனுக்கு என்னை பிடிக்கலை போல என நினைக்கிறாள்.
அதன்பிறகு என்னை பிடிக்கலன்னாலும் பரவாயில்லை. எனக்கு இந்த நிச்சயமும் வேணாம். பிரசாந்தும் வேணாம் என யோசிக்கிறாள். இதற்கிடையே தனம், பிரசாந்த், எழிலுடன் சேர்ந்து கண்ணனை நிச்சயம் வேலை பார்க்க சொல்ல இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil