விஜய் டிவியில் விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு நிகழ்ச்சியாக பாக்கியலட்சுமி சீரியலின் 300வது எபிசோடு வெற்றிகரமாக அடைந்ததைக் கொண்டாடும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், பாக்கியலட்சுமி சீரியல் குடும்பத்தினரையும் நிஜமான கூட்டுக் குடும்பத்தினரையும் சந்திக்க வைத்து ஒரு நெகிழ்ச்சியான கலகலப்பான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் புரமோவைப் பார்த்த ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியலின் ஹீரோ கோபி இல்லாததை அறிந்து ரசிகர்கள் சமூக ஊடகங்களில் என் தலைவன் கோபி எங்கடா என்று கேட்டு அட்ராசிட்டிஸ் செய்து வருகின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக 300வது எபிசோடை அடைந்துள்ளது. பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக குடும்பத்தலைவி பாக்கியலட்சுமி அல்லது பாக்யா கதாபாத்திரத்தில் கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி நடிக்கிறார். பாக்யாவின் கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீஷ்குமார் நடிக்கிறார். பாக்யாவின் இரண்டாவது மகன் எழில் கதாபாத்திரத்தில் விஜே விஷால் நடிக்கிறார். முதல் மகன் செழியன் கதாபாத்திரத்தில் வேலு லக்ஷ்மணன் நடிக்கிறார். செழியன் மனைவி ஜெனிஃபர் கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடிக்கிறார். கோபியின் முன்னாள் காதலி ராதிகா கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். பாக்யா மகள் இனியா கதாபாத்திரத்தில் நேஹா மேனன் நடிக்கிறார். வேலைக்காரி செல்வியாக கம்பம் மீனா நடிக்கிறார்.
பாக்கியலட்சுமி சீர்யலில் பாக்யா குடும்பமே உலகம் என்று வாழும் பொறுப்பான குடும்பத் தலைவி பாக்கியலட்சுமி. வளர்ந்த பிள்ளைகளின் தாயாக இருக்கும் பாக்யா, பெரியதாக படிக்காதவள் என்றாலும் எப்படியாவது தானும் சம்பாதித்து சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று முயற்சி செய்பவர். ஆனால், கோபி, பாக்யாவை பொருட்படுத்துவதில்லை. கோபி தனது மத்திய வயதில் இருந்தாலும்கூட, தான் கல்லூரி காலத்தில் காதலித்த ராதிகாவுடன் சேர்ந்து வாழ முயற்சிக்கிறான். ராதிகா கணவன் ராஜேஷ் உடன் சண்டை போட்டுக்கொண்டு விவாகரத்து வாங்கிக்கொண்டு மகளுடன் தனியாக பிரிந்து வாழ்கிறாள். ராதிகாவும் பாக்யாவும் ஃபிரெண்ட் ஆகிறார்கள். இதனால், கோபி, ராதிகாவுடனான உறவை பாக்யாவுக்கு தெரியாமலும் பாக்யாதான் தனது மனைவி என்று ராதிகாவுக்கும் தெரியாமலும் சமாளித்துக்கொண்டிருக்கிறான். இதில் கோபியாக நடிக்கும் சதீஷ்குமார் நடிப்பில் பின்னி எடுக்கிறார். பொறுப்பான குடும்ப தலைவியாக பாக்யா பல குடும்பங்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல் டி.ஆர்.பி-யிலும் உச்சம் தொட்டு, தமிழ் டாப் 5 சீரியல்களிலும் இடம்பெற்றது. ஜூலை 27, 2020ல் தொடங்கப்பட்ட பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக 300 எபிசோடுகளைக் கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக விஜய் டிவி விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சியாக பாக்கியலட்சுமி சீரியல் 300 நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் புரமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாக்கியலட்சுமி சீரியல் குடும்பத்துடன் நிஜமான கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளனர். அதே நேரத்தில் ஆட்டம் பாட்டம் என கலகலப்பாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதில், கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி விஜே விஷால், பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தியாக நடிக்கும் எஸ்.டி.பி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக நடிக்கும் ராஜலக்ஷ்மி சந்து ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். ஆனால், கோபியாக நடிக்கும் சதீஷ்குமார்தான் மிஸ்ஸிங்.

பாக்கியலட்சுமி சீரியல் 300 சிறப்பு நிகழ்ச்சியின் புரமோவைப் பார்த்த ரசிகர்கள் பாக்கியலட்சுமி குடும்பத்தில் முக்கிய கதாபாத்திரமான கோபி இல்லாததை அறிந்து, ரசிகர்கள் என் தலைவன் கோபி எங்கடா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். பாக்கியலட்சுமி சீரியல் 300 சிறப்பு நிகழ்ச்சி அட்ராசிட்டிஸ் வீடியோ சமூக ஊடகங்களில் ரசிகர்களின் கம்மெண்ட் உடன் பரபரப்பாக வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“