பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் சதீஷ். அவரது காமெடி கலந்த வில்லத்தனத்திற்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரது நடிப்பை பார்த்து ஒரு சிலர் அவரை மிகவும் தரக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தும் வருகின்றனர்
மேலும் சீரியலில் 2 திருமணம் செய்துகொண்ட இவர், அடுத்தடுத்து பல துயரங்களை சந்தித்து வருகிறார். அதே சமயம் இவருக்கு எதிராக மக்கள் மத்தியில் பல கருத்துக்களும் நிலவி வருகிறது. சீரியலில் வில்லன் நடிகருக்கு எப்போதுமே இப்படித்தான் பாராட்டுக்கள் கிடைக்கும். சமூகவலை தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகர் சதீஷ் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பதிவில், யோகா மற்றும் யோகம் என இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்று கூறும் கோபி, நீங்கள் அமைதியாக இருந்தால் அது யோகா, ஆனால் உங்கள் மனைவி அமைதியாக இருந்தால் அது யோகம் என்று கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு யோகா வேண்டுமானால் கிடைக்கும் ஆனால் யோகம் என்பது இந்த ஜென்மத்தில் உங்களுக்கு எட்டாக்கனிதான் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“