scorecardresearch

இளமையில் மாஸ் ஹீரோ போல செம கெத்து… இந்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலத்தை தெரிகிறதா?

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சுதீஷின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தொடரின் ஹீரோயினாக பாக்கியலட்சமி கதாப்பாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், பாக்கியலட்சுமி கணவர் ரோலில் சுதீசும் நடித்து வருகின்றனர்.

சீரியலில் மிகவும் அப்பாவியான குணத்தை கொண்ட பாக்கியாவை ஏமாற்றும் அவரது கணவர், ராதிகா என்பவரை 2 ஆவதாக திருமணம் செய்துகொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் காரணமாக சீரியல் மிகவும் விறுப்விறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதிலும், பாக்கியா கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், வேலை உட்பட அனைத்து விஷயங்களிலும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதால், இந்த சீரியலுக்கு குடும்ப ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.

இந்நிலையில், கோபி ரோலில் நடிக்கு சதீஸ் குறித்து பலரும் அறியாத தகவல் சோஷியல் மீடியாவில் பரவ வருகிறது. பாக்கியலக்ஷமியில் நடிப்பதற்கு முன்பே, அவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். சென்னையை சேர்ந்த இவர், மின்சாரப்பூவே படத்தின் மூலம் திரைத்துறையில் கால் பதித்தார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் ஏஜிஆர் படம் மூலம் உருவானது. சிறந்த குணச்சித்திர நடிகராக பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதையடுத்து, அடுத்த இன்னிங்கிஸை சின்னத்திரையில் 2000 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். முதல் சீரியலாக சன்டிவியில் ஒளிப்பரப்பான மந்திர வாசலில் நடித்திருந்தார்.

அதன்பிறகு, சூலம், கல்யாண பரிசு 2, ஆனந்தம், திருமதி செல்வம், வம்சம், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், குலதெய்வம், பொன்னூஞ்சல் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.மாடலிங் மற்றும் விளம்பரங்கள் சிலவற்றிலும் நடித்து வந்தார்.

தற்போது, சதீஸ் முதன் முதலாக நடித்த மந்திர வாசல் தொடரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மிகவும் இளமையாக இருக்கும் அவர், அன்றைய கால மாஸ் ஹிரோவாக இருப்பதாக புகைப்படத்தை பகிரும் நெட்டிஸ்சன்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Baakiyalakshmi serial actor old photo viral on social media