Advertisment

பாக்கியலட்சுமி நடிகர் ரஞ்சித்தின் கிராமத்து விசிட் : பாரம்பரிய வள்ளிகும்மியாட்டம் பார்த்து மகிழ்ச்சி

ரஞ்சித் கடைசியாக தமிழில் அதிபர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ranjith Actor

நடிகர் ரஞ்சித்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ரஞ்சித் கிராமத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் , குணச்சித்திரம், காமெடி என பல கோணங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ரஞ்சித். இதில் பீஷ்மர் என்ற படத்தை இயக்கிய தயாரித்து நாயகனாக நடித்திருந்தார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ரஞ்சித் கடைசியாக தமிழில் அதிபர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியானது.

அதன்பிறகு தமிழில் நடிக்காத இவர், 2020-ம் தொடங்கப்பட் விஜய் டிவியின் செந்தூரப்பூர்வே சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். கடந்த ஆண்டு இந்த சீரியல் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது விஜய் டிவியின் மற்றொரு ஹிட் சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், கொங்கு நாட்டில் பாரம்பரியம் மிக்க வள்ளிகும்பியாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்திராக நடிகர் ரஞ்சித் கலந்துகொண்ட நிலையில், விழா குழுவினர் அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து விழா சிறப்பாக நடைபெற்ற நிலையில், விழாவில் பேசிய ரஞ்சித்த நடனமாடிய கலைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ranjith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment