scorecardresearch

‘பாக்யா நீ சீரியல்ல நல்லா பாரு… உன் புருஷன் தான் என் பின்னாடி வர்றாரு!’ அடடே, நிஜ மோதல்

பாக்யாவும் ராதிகாவும் இங்கு சண்டை போடுவதற்கு பதிலாக சீரியலில் சண்டை போட்டிருக்கலாம்

‘பாக்யா நீ சீரியல்ல நல்லா பாரு… உன் புருஷன் தான் என் பின்னாடி வர்றாரு!’ அடடே, நிஜ மோதல்

விஜய் டிவியில் தற்போது பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்று பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இந்த சீரியல் நடிகர் நடிகைகள் பங்கேற்றுள்ள டிவி ஷோ குறித்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தால் என்ன நடக்கும், தனது கணவன் அடிப்படி ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் மனைவி என்ன செய்ய வேண்டும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை தெளிவாக எடுத்து சொல்லும் இந்த சீரியல் தற்போது பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது.

கோபி ராதிகா பழக்கம் பாக்கியாவுக்கு தெரிந்து தற்போது வீட்டை விட்டு வெளியேறியுள்ள பாக்கியா, கணவரின் ஆசைப்படி அவருக்கு விவாகரத்தும் கொடுத்துவிட்டார் இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், விவாகரத்து பெற்றவுடன் கோபி நேராக ராதிகா வீட்டுக்கு சென்று எனக்கும் பாக்யாவுக்கும் டைவர்ஸ் ஆகிவிட்டது இனி எல்லமே உன் கையில் தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டார்.

இதனால் அடுத்து ராதிகா கோபி கல்யாணம் நடைபெறுமா? பாக்யா அடுத்து என்ன செய்ய போகிறார் என்று பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பாக்யா, ராதிகா எழில் ஆகிய மூன்றுபேரும் விஜய் டிவியின் ராஜூ வீட்டில் பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இதில் பாக்யாவுக்கும் ராதிகாவுக்கும் பிரச்சினை ஏற்படும் நிலையில், அதை தீர்த்து வைக்க லேடி கெட்டப்பில் ராமர் வருகிறார்

காமெடியின் உச்சக்கட்டாக சென்றுகொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், பாக்யாவும் ராதிகாவும் இங்கு சண்டை போடுவதற்கு பதிலாக சீரியலில் சண்டை போட்டிருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Baakiyalakshmi serial actress participate in vijay tv reality show