பாக்கியலட்சுமி ராதிகாவா இவர்? இப்படி மாறிட்டாரே! நடிகை ரேஷ்மா வைரல் க்ளிக்ஸ்

திரைக்கு வராத கதை, வணக்கம்டா மாப்ளே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்மா கடைசியாக ஹைவே என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

திரைக்கு வராத கதை, வணக்கம்டா மாப்ளே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்மா கடைசியாக ஹைவே என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress reshma

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

2015-ம் ஆண்டு வெளியான மசாலா படம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. அதனைத் தொடர்ந்து வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.

publive-image
Advertisment
Advertisements

தொடர்ந்து கோ 2, மணல்கயிறு 2 உள்ளிட்ட படங்களில் நடித்த ரேஷ்மா, கேர்ள்ஸ் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். திரைக்கு வராத கதை, வணக்கம்டா மாப்ளே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்மா கடைசியாக ஹைவே என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

publive-image

வம்சம் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமான ரேஷ்மா, வாணி ராணி, மரகதவீனை, ஆண்டாள் அழகர், உயிர்மெய், என் இனிய தோழன் அன்பே வா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

publive-image

தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் கோபிக்கு கொடுக்கும் தொல்லை, பாக்யாவிடம் வாங்கும் பல்ப் என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

publive-image

அதேபோல் ஜீதமிழின் சீதாராமன் சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். மேலும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றுள்ள ரேஷ்மா விலங்கு வெப் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றனர்.

publive-image

அந்த வகையில் தற்போது ரேஷ்மா மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணைதய்தில் வைரலாகி வரும் நிலையில், லைக்ஸ்களை குவித்து வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Reshma

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: