Advertisment

சினிமாவில் ஹீரோவான பாக்கியலட்சுமி சீரியல் நடிகை மகன்... கம்பம் மீனா வாழ்த்து; வைரல் போட்டோ

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகன் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். புகைப்படத்தை வெளியிட்டு சின்னத்திரை நடிகை கம்பம் மீனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Baakilakshmi serial family

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகன் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். புகைப்படத்தை வெளியிட்டு சின்னத்திரை நடிகை கம்பம் மீனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று டி.ஆர்.பி. டாப் 10 சீரியல்களில் இடம்பெற்று வருகிறது. சில வாரங்கள் டி.ஆர்.பி-யில் முதலிடத்தை பிடித்து வந்தது.

பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பமே உலகமாக இருக்கும் பாக்யா, ஆனால், பாக்யாவின் கணவர் கோபி பாக்யாவை விட்டுவிட்டு, வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு வெளியே செல்கிறார். ஆனாலும், பாக்யா சொந்தக்காலில் நின்று குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். 

கோபி இரண்டாவது மனைவி ராதிகாவுடன் பாக்யா வீட்டுக்கு வந்து பாக்யா எதை செய்தாலும் அதை குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறார். கோபியின் அம்மாவும் பாகியாவின் மாமியாருமான ஈஸ்வரி தனது மகனுடன் சேர்ந்துகொண்டு பாக்யா என்ன செய்தாலும் குற்றம் சொல்கிறார். ஆனால், பாக்யாவுக்கு ஆதரவாக பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தி, பாக்யாவின் மகன்கள் எழில், செழியன், மருமகள்கள், பணிப்பெண் மீனா என அனைவருமே ஆதரவாக நிற்கின்றனர். ஒரு கட்டத்தில் ராதிகா கூட பாக்யாவுக்கு ஆதரவாக பேசுகிறாள். 

பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் பாக்யாவாக நடிக்கும் சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிக்கும் சதீஷ்,  ராமமூர்த்தியாக நடிக்கும் ஈஸ்வரியாக நடிக்கும் ராஜ்யலட்சுமி, ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி, பணிப்பெண் மீனாவாக நடிக்கு கம்பம் மீனா என அனைவரும் அருமையாக நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகன் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் வெளியாகி உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. சின்னத்திரை நடிகை கம்பம் மீனா புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் மாமியார் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ராஜ்யலட்சுமியின் மகன் ரோஹித் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.  ‘பல்லேகோட்டிக்கி பண்டகே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரோஹித் ஹீரோவாக நடித்துள்ளார்.  இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

நடிகை கம்பம் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ராஜ்யலட்சுமி மற்றும் அவரது மகன் ரோஹித் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். அதில், “Pallegootiki Pandage occhindi”

பல்லகோட்டிக்கி பண்டகே ஒச்சிந்தி... இது தெலுங்கு படம் இன்று 01/12/2023 ரிலீஸ் ஆகியிருக்கு...

இதுல நம்ம சங்கராபரணம் ராஜலட்சுமி மேம் பையன் ரோஹித் ஹீரோவா அறிமுகம் ஆகியிருக்கிறார்...

படம் வெற்றியடையவும் ரோஹித் ற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்... சீக்கிரமா தமிழுக்கும் வாங்க தம்பி” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். கம்பம் மீனா பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment