Advertisment

சன் டிவிக்கு செல்லும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை;  வரவேற்கும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகை சன் டிவி சீரியலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த நடிகையை சன் டிவி சீரியல் ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
bakya serial actress

சன் டிவிக்கு செல்லும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகை சன் டிவி சீரியலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த நடிகையை சன் டிவி சீரியல் ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர்.

Advertisment

தொலைக்காட்சி சீரியல்கள் கடந்த கால் நூற்றாண்டில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ரசிகர்கள் பட்டாளத்தையும் ஈர்த்து உள்ளது. அந்த வகையில், தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில சீரியல்கள் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்துள்ளன. ஆனால், சமீபத்தில் சில ஆண்டுகளாக நிறைய சீரியல்கள் பிரபலமாகி உ ள்ளன.

பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளான சன் டிவி, விஜய், டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய தொலைக்காட்சி சீரியல்கள் இடையே டி.ஆர்.பி ரேட்டிங்கில் கடும் போட்டியே நிலவுகிறது. அந்த வகையில், தொடர்ந்து, டாப் 10 சீரியல் வரிசையில் இடம்பிடித்து வரும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 1000 எபிசோட்டை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் எல்லா கதாபாத்திரங்களுமே பிரபலம்தான். பாக்கியலட்சுமி, ராதிகா, இனியா, ஜெனி, அமிர்தா, கோபி, எழில், செழியன், ஈஸ்வரி, ராமமூர்த்தி, மீனா என எல்லா கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும் ப்கதாபாத்திரங்கள்தான். ஆனால், பாக்கியலட்சுமி சீரியலில் சில கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் மாறி இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ராதிகா, செழியன், ஜெனியின் தந்தை, அமிர்தா கதாபாத்திரத்தில் நடிகர்கள் மாறி இருக்கிறார்கள். இவருக்கு பதில் இவர் என நடிகர்கள் மாறியுள்ளனர். பார்வையாளர்களும் புதிய நடிகரை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், விஜய் டிவின் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை நேஹா சன் டிவி சீரியலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சன் டிவியில் வாணி ராணி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நேஹா, பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு மகளாக இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பதின் பருவ பெண் கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பு பலரையும் கவர்ந்து வருகிறது. 

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கல்லூரி செல்லும் மாணவியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை நேஹா பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சன் டிவி சீரியலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அவர் சன் டிவியில் எந்த சீரியலில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா மீண்டும் சன் டிவி சீரியலில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் அவரை வரவேற்று பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment