பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் புகழ் பெற்ற நடிகை சுஜித்ரா தற்போது நடிகர் பிரபு தேவாவுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவற்பை பெற்று வரும் சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கான ரசிகர்கள் பட்டாளமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், விஜய் டி.வி.யின் பாக்யலட்சுமி சீரியல் மூலம் பிரபலமானவர் சுசித்ரா.
தொடக்கத்தில் வரவேற்பை பெறாத இந்த சீரியல் தற்போது பாக்கியா கேரக்டரில் நடித்து வரும் சுசித்ரா மற்றும் கோபி கேரக்டரில் நடித்து வரும் சதீஷ் ஆகியோரின் இயல்பான நடிப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மனைவி பாக்யாவுக்கு தெரியாமல் முன்னாள் காதலியுடன் பழகி வந்த கோபி, இப்போது தனது குடும்பத்திடம் மாட்டிக்கொண்டார். இந்த உண்மை தெரிந்த பாக்யா தற்போது வீட்டை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், அடுத்து என்ன நடக்கும், கோபி ராதிகாவை கல்யாணம் பண்ணிக்குவரா அல்லது பாக்யாவுடன் சேர்ந்து வாழ்வாரா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரை சீரியலில் நடித்து வந்த நடிகை சுசித்ராவுக்கு தற்போது சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரபுதேவா நடிப்பில் கன்னடம் மற்றும் தமிழில் தயாராக உள்ள படம் ஒன்றில், சுசித்ரா பிரபுதேவாவின் அம்மாவாக நடிக்க உள்ளார். பாக்யலட்சுமி சீரியலில் அம்மா வேடத்தில் நடித்து அசத்தி வரும் சுசித்ராவுக்கு தற்போது திரைப்பட வாய்ப்பும் அம்மா கேரக்டருக்காக வந்துள்ளது.
இது தொடர்பாக புகைபபடத்தை சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தி் பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், இது ஒரு நல்ல நாள். சிறந்த மற்றும் அழகான உள்ளங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை கொடுத்த கடவுளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் பாக்யாலட்சுமி சீரியல் போன்று திரைப்படத்திலும் அம்மா கேரக்டரில் அசத்துவார் சுசித்ரா என்று கருத்தக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil